தொழு நோய் நீங்க
தொழு நோய் மைக்கோபேக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான கண்ணுக்குத் தெரியாத கிருமியால் உண்டாகிறது. இதை 1873-ல் டாக்டர் ஹேன்ஸன் என்பவர் கண்டுபிடித்தார். சாதாரணமாக இது மனிதரின் மூலமே பரவுகிறது. தொழு நோய் நோயாளி தும்மும் போதும்,இருமும் போதும், காறித் துப்பும் போதும் வெளிப்படும் கிருமிகளாலேயே இந்நோய் பரவுகிறது.தொழுநோய்க் கிருமிகள் தாக்கியதற்கும், இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் சுமார் 3வருடம் முதல் 5 வருடம் வரை ஆகும். இது மற்ற தொற்று வியாதிகளைப் போல் எல்லோருக்கும் வருவதில்லை. உடலில் அதிக தடுப்புச் சக்தி உள்ளவர்களை அதிகமாகத் தாக்குவதில்லை. குறிப்பிட்ட அளவை விடக் குறைவான தடுப்பு சக்தி உள்ளவர்களுக்கே இந்நோய் வருகிறது. ஒவ்வொருவரின் தடுப்பு சக்திக்கேற்ப இந்நோயின் வீரியம் வித்தியாசப்படுகிறது
தொழுநோய் அறிகுறிகள்
உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குறைந்த , வெளிர்ந்த அல்லது சிவந்த தேமல். அந்தத் தேமல் மீது முடி உதிர்ந்து காணப்படுதல்.
கை,கால்களில் மதமதப்பு அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருத்தல். தோல் தடித்தும், எண்ணெய் பூசியது போன்ற தோற்றம். உடலிலே ஏதாவது ஒரு பகுதியில் வியர்வை இல்லாமல் இருத்தல். அதே சமயம் உடலின் மற்ற பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வியர்த்தல்.காது மடல் தடித்திருத்தல். கண் புருவமுடி உதிர்தல். கன்னங்கள் தொங்குவது போன்ற நிலை.சிங்க முகம் போன்ற தோற்றம் ( இது தற்போது சாதாரணமாகக் காணப்படுவதில்லை) பாதங்களில் சாம்பல் பூசியது போல் காணப்படுதல், பாதங்களில் பெரிய வெடிப்பு இருத்தல்.உள்ளங்கை சதை மேடுகள் சூம்பியிருத்தல். கை, கால் விரல்கள் மடங்கியிருத்தல், குறைந்திருத்தல், விரல்கள் திரும்பியிருத்தல். கண்ணிமை மூட முடியாமலிருத்தல், கருவிழியிலே புண் இருத்தல். முகத்தின் பாதி பாகம் (வலது அல்லது இடது) செயல் இழத்தல். மணிக்கட்டு தொங்கி விடுதல்.
கணுக்கால் செயலிழந்து போதல்.ஆறாத, உணர்ச்சியற்ற நீண்டநாள் புண்.
சட்டையில் பொத்தான் போட முடியாமை, பேனாவைப் பிடித்து எழுத இயலாமை.
தொழுநோய் என உறுதி செய்ய
1. உணர்ச்சியற்ற தேமல்
2. நரம்புகள் தடித்துக் காணப்படுதல்
3. தோல் பரிசோதனையில் மைக்கோ பேக்டீரியம் லெப்ரே கிருமிகள் காணப்படுதல்.
தோல் உணர்ச்சியின்மையைக் கண்டுபிடிக்க…
தொடு உணர்ச்சியை இறகு, பஞ்சு, நைலான் கயிறு போன்றவற்றின் மூலம் அறியலாம்.
வலி உணர்ச்சியை குண்டூசி, பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றால் அறியலாம்.
பாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி இவற்றில் பரிசோதனைகள் செய்து இவ்விரண்டு பகுதிகளில் ஏற்படுகிற தொடு உனர்வு, வலியுணர்வு மாறுதல்களை வைத்து அறியலாம்.
பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பரங்கிப் பட்டை சேர்த்து செய்த சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை, மாலை இரண்டு வேளை உட்கொள்ள நாள்பட்ட தொழு நோய் தீரும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும். வல்லாரை இலையும் இந்நோய்க்கு மருந்து என்கின்றனர் சிலர்.

தொழு நோய்க்கு சித்த மருத்துவம்

டாக்டர் எய்ன்சிலிக் மருதோன்றியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம் என கண்டறிந்துள்ளார்.
அரசு மருத்துவ மனைகளில் பணியற்றி வரும் சித்த மருத்துவர்களை அனுகி தொழு நோய் அறிகுறிகள் மற்றும் அது குறித்த சந்தேகங்களை எவ்வித கட்டணமும் இன்றி கேட்டு அறிக.