அபிசேக பலன்கள் - abishega palan - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, November 15, 2015

அபிசேக பலன்கள் - abishega palan

அபிசேக பலன்கள்

அபிசேக பலன்கள்

அபிசேக பொருட்கள்

  1. எண்ணெய் அபிசேகம்
  2. பஞ்சகவ்யம் அபிசேகம்
  3. நெல்லி முள்ளி அபிசேகம்
  4. மஞ்சள் அபிசேகம்
  5. பஞ்சாமிருதம் அபிசேகம்
  6. பால் அபிசேகம்
  7. தயிர் அபிசேகம்
  8. நெய் அபிசேகம்
  9. தேன் அபிசேகம்
  10. கரும்பு சாறு அபிசேகம்
  11. பழரசங்கள் அபிசேகம்
  12. இளநீர் அபிசேகம்
  13. அன்னம் அபிசேகம்
  14. சந்தனம் அபிசேகம்
  15. ஸ்நபனநீர் அபிசேகம்
  16. பச்சரிசி மாவு அபிசேகம்
  17. விபூதி (திருநீர்) அபிசேகம்
  18.  மாப்பொடி அபிசேகம்
  19.  சக்கரை அபிசேகம்

 அபிசேக பலன்கள்

எண்ணெய் அபிசேகம்

சுவாமிக்கு எண்ணெய் அபிசேகம் செய்வது மிகவும் விசேசம்.பெருமளவு
பக்தர்களால் செய்யப்படும் இந்த அபிசேக பூஜை சிறப்பும் புகழும் வாய்ந்தது.
மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.

மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.

மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.


பஞ்சகவ்யம் அபிசேகம்

பசுவிற்க்கு பெருமை தரும் அதன் ஐந்து பெருட்களான பால், தயிர், நெய், சாணம்,கோமயம் இவற்றை ஒரு குறிப்பிட்ட அளவு எடுத்து அபிசேகம் செய்ய வேண்டும். இதுவே பஞ்சகவ்யம் அபிசேகம் ஆகும். இதனால் செய்த பாவகள் நீங்கும் என்று திருநாவுக்கரசர் தனது பாடலில் கூறியுள்ளார்.
  
" பாவ மும்பழி பற்ற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந் தாடும் அவன்கழல்
 மேல ராய்மிக வும்மகிழ்ந் துள்மின்
காவ லாளான் கலந்தருள் செய்யுமே "

நெல்லி முள்ளி அபிசேகம்

 நெல்லி முள்ளி அபிசேகம் உடலில் உள்ள நோய்களை போக்கி உடல் ஆரோக்கியத்தை தரும

மஞ்சள் அபிசேகம்

குடும்ப ஒற்றுமை மேன்மை அடையும், நோய்கள் நெருங்காது, ராஜ வசியத்தைக் கொடுக்கும்

பஞ்சாமிருதம் அபிசேகம்

பஞ்சாமிருதம அபிசேகம் இரண்டு வகைகள் ஆகும். ஏலக்காய் போன்ற வாசனை பொருட்களுடன் பால், தயிர், சக்கரை,தேன் சேர்த்து செய்யப்படுவது ரசபஞ்சாமிருதம் ஆகும். ரசபஞ்சாமிருதத்துடன் மா, பலா, வாழை மற்றும் பழங்களை சோர்த்து செய்வது பஞ்சாமிருதம் ஆகும்.

பஞ்சாமிருதம் கொண்டு அபிசேகம் செய்ய செல்வம் பெருகுகி, மக்கட்பேறு உண்டாகும், கோபம், சோகம் நீக்கும், மரண பயத்தை போக்கும்.ஒழுக்கத்தை வளர்க்கும்.

பால் அபிசேகம்

பசுவின் காம்புகளில் ஏழு சமுத்திரங்கள் வாசஞ் செய்வதால் பால் அபிசேகம் செய்வது ஏழு சமுத்திரங்களைக்கொண்டு இறைவனைஅபிசேகம் செய்வதாக கருத்ப்படுகிறது. பால் நீடித்த ஆயிலையும், சத்வ குணத்தையும் தரும், ஜதக தோஷங்கள் நீங்கும்.

தயிர் அபிசேகம்.

தயிர் கெட்டியாக இருக்கும் அதே போல் நமக்கு அவனை பற்றி வந்த நல்ல எண்ணமும் நம் மனதை விட்டு அகலாமல் கெட்டியாக இருக்கவும், நாம் அவனுடைய பொன்மலர் பாதங்களை கெட்டியாக விடாமல் பிடிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதேடு, வியாதி நீக்கம், குழந்தை பாக்கியம் உண்டாக்கும்.

நெய் அபிசேகம்

 நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும், அஷ்ட ஐஸ்வரியம், வழக்கு வெற்றி உண்டாகும்.

தேன் அபிசேகம்

தேன் கொண்டு அபிசேகம் செய்ய மகிழ்ச்சி, வாழ்வும் இனிமையாகும், இன்குரல் கொடுக்கும், சுகம்தரும்.

கரும்பு சாறு அபிசேகம்

கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் உண்டாகும்.

பழரசங்கள் அபிசேகம்

செல்வம் பெருகுகி, மக்கட்பேறு உண்டாகும், கோபம், சோகம் நீக்கும், மரண பயத்தை போக்கும்.ஒழுக்கத்தை வளர்க்கும்.

இளநீர் அபிசேகம்

குடும்ப ஒற்றுமைக்கும், சந்தோசத்திற்க்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

அன்னம் அபிசேகம்

அன்னத்தால் அபிசேகம் செய்ய அரச வழ்வு தரும்.

சந்தனம் அபிசேகம்

சந்தனத்தால் அபிசேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம். உடல் குளிர்ச்சி பெறும். மனதிற்கு அமைதி கிடைக்கும்.

சுத்த நீர் அபிசேகம்

தூய்மையான ஆற்று நீர், கிணற்று நீர் அபிசேகத்திற்க்கு முதன்மையானதாகும். "சென்றோடு தீர்த்தங்கள் ஆனார்தாமே" என்னும் அப்பர் பொருமானின் வாக்கினால் தீர்த்தம் இறைவனோடு தெடர்புடையதாகும். இதனை குடங்களில் தூய்மையானவர்கள் சென்று வாத்தியங்கள் முழங்க நாள் தோறும் எடுத்து வருதல் வேண்டும். நீர் எடுத்து வர அதற்குறி கால நேரங்களில் மட்டுமே செய்தல் வேண்டும். பழைய நீரை பயன்படுத்த கூடாது. 

கங்கை நீரில் இருக்கிறாள் என்பது மரபு, எடுத்து வரப்பட்ட நீரில் வாசனை நிரைந்த மலர்களை சேர்த்து அபிசேகம் செய்தல் சிறப்பு.

மனதில் வேண்டியவைகள் நிரைவேறும், மனசாந்தி ஏற்படும்.

பச்சரிசி மாவு அபிசேகம்

பச்சரிசி மாவு கொண்டு அபிசேகம் செய்ய, கொடுத்து வரா கடன் வசூலாகும்.

விபூதி (திருநீர்) அபிசேகம்

விபூதி (திருநீர்) கொண்டு அபிசேகம்  போகமும், மோட்சமும் நல்கும்.

மாப்பொடி அபிசேகம்

மாப்பொடியால் இறைவனுக்கு அபிசேகம் செய்யா கடன் தீரும்

சக்கரை அபிசேகம் 

சுத்தமான நாட்டு சக்கரையால் பகவானுக்கு அபிசேகம் செய்திட நீரில் இட்ட சக்கரைபோல் பகைவர்கள் நீங்கி போவார்கள்.
abisega palangal, apisega palan, iraivanukku apisega palankal, abisega porutkal, ennai abishekam, panchakavya abishekam, nelli mulli abishekam, panchamirtham abishekam rasa panchamirtham abishekam, paal abishekam, milk abishekam, thair abishekam, then, honey, karumpu saaru, pazha rasam abishekam, ilaneer apisekam, anna abishekam, patcha arichi abishekam, vipoothi, thir neer abishekam, maap podi apisegam, sakkarai apisegam. katan theera abishekam, nei abishekam. apisegam seivathu eppadi, abisheka murai.அபிஷேகம் செய்வது எப்படி, அபிஷேக பலன்கள்,