கங்கை நதியில் நீராடிய பலன் பெற நெல்லிக்கனி
நெல்லி இலைகளால் விஷ்ணு பகவானை பூஜிப்பது மிகவும் சிறப்பானதாகும். நெல்லி மரம் உள்ள இடத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
ஏகாதசி தினத்தன்று நெல்லிகனிகளை சிலவற்றை எடுத்து குளிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து நீரடினால் கங்கை நதி நீரில் குளித்தால் என்ன பலன்கிடைக்குமே அவை அனைத்தும் கிடைக்கும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது. மேலும் கங்கையில் நீராடுவதற்கு சமம் என்றும் கூறப்படுகிறது.
ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி திதியில் நெல்லிகனிகளைசாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. நெல்லிகனி ஆயில் விருத்தியை தரக்கூடியது அதனால் கோவில்களில் கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு கீழே நெல்லிகனி வடிவில் ஒரு கல் வைக்கப்படுகிறது இதற்கு ஆமலகம் என்று பெயர்.
ஆன்மீக ரீதியாக் ஞாயிறு, வெள்ளி, அமாவசை, சஷ்டி, சப்தமி, நவமி திதிகளில் நெல்லி கனிகளை பயன்படுத்தக் கூடாது.