வேர்கடலை மருத்துவ பயன் - verkadalai maruthuva payan - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, April 26, 2015

வேர்கடலை மருத்துவ பயன் - verkadalai maruthuva payan

வேர்கடலை மருத்துவ பயன் - verkadalai maruthuva payan

 




வேர்கடலை மருத்துவ பயன் - verkadalai maruthuva payan - peanut medicinal uses - groundnut maruthuvapyan. மூளை, ரத்தப்போக்கு, உடல் எடைகுறைய, புரதம், புண்கள், சாப்பிட வேண்டிய அளவு, நீரிழிவுநோய். tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்
வேர்கடலை மருத்துவ பயன்

மூளை             

            வேர்க்கடலையில் மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் உள்ளன. 


ரத்தப்போக்கு

           எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. எனவே பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.


உடல் எடைகுறைய


          ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட முடியும். இவ்வாறாக உடல் எடையையும் குறைக்கலாம். 





புரதம்

          வேர்க்கடலையில் தரமான உயர்ந்த புரதமும், முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் உள்ளது இது குழந்தைகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது.



புண்கள்     

         வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது 


வேர்க்கடலை சாப்பிட வேண்டிய அளவு

        வேர்க்கடலையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கேளாறுகள் ஏற்படும். நீரிழிவுநோய், மேக நோய் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.