நிலவேம்பு மூலிகை பயன் - Nilavembu mooligai payan
நிலவேம்பு |
மிகவும் கசப்புச் சுவையுடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவிலமைந்த தண்டுகளையும் உடைய சிறு செடி. தமிழ் நாட்டின் சமவெளிப் பகுதிகளில் தானே வளர்கிறது. செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. ஆவாரை போன்ற வெளிறிய மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினம். தென் தமிழ்நாட்டில் காணப்படுகிறது.
நிலவேம்பு மருத்துவ பயன்
இலையே மருத்துவப் பயனுடையது. காய்சல் அகற்றுதல் பசியுண்டாக்குதல் தாது பலப்படுத்துதல் முறை நோய் தீர்த்தல் ஆகிய பண்புகளை உடையது.யாரெல்லாம் நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்ளக்கூடாது?
ஏழு வயது குறைவான குழந்தைகளுக்கு இந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் கொடுக்கக்கூடாது. அதேபோல் காய்ச்சல் வந்து தொடர் வாந்தி, வயிற்றுவலியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த கசாயம் கொடுக்கக்கூடாது.
சகல காய்ச்சலுக்கும் நிலவேம்பு கசாயம்.
நிலவேம்பு கசாயம் எப்படி செய்து?
நிலவேம்பு கசாயாம் செய்ய தேவையான மூலிகைகள்
- நிலவேம்பு பொடி - 10கிராம்
- பற்படாகம் - 10 கிராம்
- விஷ்ணுகிரந்தை - 10கிராம்
- பூண்டு - 2 பல்
- சுக்கு - சிறியது
- மிளகு - 10கிராம்
- திப்பிலி - 3 மட்டும்
இவை அனைத்தயும் 250 மில்லி நீரில் கொதிக்க வைத்து 100 மில்லியாக சுண்டியபின் வடித்து காலை மாலை மாலை குடித்து வர அனைத்து விதமான காய்ச்சலும் நீங்கும் இரத்ததில் வெள்ளை அனுக்கள் குறைந்து இருந்தல் பப்பாலி இலை சாறு இரண்டு ஸ்பூன் சேத்து கொள்ளலாம்.
மலேரியா குணமடைய
நிலவேம்பு, கண்டங்கத்திரி வேர் வகைக்குக் கைப்பிடியளவு, சுக்கு 10 கிராம் சேர்த்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி நாளைக்கு 3 முறையாகக் குடிக்க மலேரியா குணமடையும்.நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் கொடி வகைக்கு 10 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி 30 மி.லி வீதம் கொடுத்து வரக் குழந்தைகளுக்குக் காணும் சகலக் காய்ச்சலும் குணமாகும்.(குழந்தைகளுக்கு சித்த மருத்துவர் ஆலோசனை இன்றி கொடுக்க வேண்டாம்.)