குதிகால் வலிக்கு மருத்துவம்
kuthikal vali maruthuvam in tamil
குதிகால் வலி என்றால் என்ன
குதிகாலில் எலும்புகள் இணையும் இடத்தில் தோலும் எலும்பு இணையும் பகுதியின் நடுவில் சவ்வு அமைப்பு உள்ளது இந்த சவ்வு அமைப்பில் பாதிப்பு ஏற்படும் போது குதிகாலில் வலி உண்டாகிறது.
குதிகால் வலி உண்டாக காரணம்
அதிகமான உடல் எடை, குதிகால் உயரமான காலணிகள் அணிவது, அதிகமாக நடப்பது, நின்று கொண்டே வேலை செய்வது, சதை பகுதியில் ஏற்படும் இருக்கம், தொடர்ந்து குளிர்ச்சியான இடத்தில் இருப்பது அல்லது சத்து குறைபாடு போன்ற காரணங்களால் குதிகாலில் வலி உண்டாகிறது.குதிகால் வலி குணமாக சித்த மருத்துவம்
- கோரை கிழங்கு 10 கிராம்
- அசுவ கந்தா 10 கிராம்
- முடக்கத்தான் 10 கிராம்
- இஞ்சி 10 கிராம்
- பூண்டு 10 கிராம்
- மாவிலங்கபட்டை 10 கிராம்
- விராலி இலை 10 கிராம்
செய்முறை
இவைகளை எடுத்து 300 மில்லி நீர் விட்டு 60 மில்லியாக வற்ற வைத்து காலை மாலை உணவுக்கு முன் குடித்து வர சரியாகும்.
ஒளசதம்
Owshadham