இருதயம் பலம் பெற லேகியம் செய்முறை
Iruthayam valupera legiyam sei murai.
இருதயம் பலமாடைய இருதயம் சர்ந்த நேய்கள் தாக்காமல் இருக்க, இருதய வால்வுகள் பலமாக, இரத்தம் சுத்தமாக, உயர் மற்றும் தாழ் இரத்த அழுத்தம் சீராக்க, மேனி பலபலப்பாக சித்த மருத்துவ லேகியம்.இருதய லேகியம் செய்ய தேவையன பொருட்கள்
- ஏலரிசி - 10 கிராம்
- சாதிக்காய் - 10 கிராம்
- சாதிப்பத்திரி - 10 கிராம்
- சீரகம் - 10 கிராம்
- கொத்தமல்லி - 10 கிராம்
- சுக்கு - 20 கிராம்
- மிளகு - 20 கிராம்
- திப்பிலி - 20 கிராம்
- கிராம்பு - 20 கிராம்
- தாளிச பத்திரி - 20 கிராம்
- சீமை அத்திப் பழம் - 20 கிராம்
- பறங்கிப்பட்டை - 20 கிராம்
- தான்றிக்காய் - 20 கிராம்
- அமுக்கிரா கிழங்கு - 50 கிராம்
- நிலப்பனைக்கிழங்கு - 50 கிராம்
- தண்ணீர் விட்டான் கிழங்கு - 50 கிராம்
- கோரைக் கிழங்கு - 50 கிராம்
- திராட்சைப்பழம் (விதை நீக்கியது) - 50 கிராம்
- விளாம்பழம் - 50 கிராம்
- பேரிச்சம் பழம் 100 கிராம்
- தேன் 150 கிராம்
- நெய் 250 கிராம்
- பனைவெல்லம் 1 கிலோ
- பசும்பால் 1.5 லிட்டர்
- அறுகு சமூலம் சாறு 1.5 லிட்டர்.
லேகியம் செய்முறை
அறுகு சமூலச் சாற்றில் பனைவெல்லத்தைப் போட்டுக் கரைத்து கல்மண் இன்றி வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகாக்கி, மருந்துச் சரக்குகளைச் சூரணித்து, பாகில் சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி, நெய்விட்டுக் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கி ஆறியபின் தேன் விட்டுப் பிசைந்து ஜாடியில் பத்திரப்படுத்தவும்.லேகியம் சாப்பிட வேண்டிய அளவு
அளவு: 10 கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள் பாலுடன்.லேகியம் குணமாக்கும் நோய்கள்:
இருதய நோய்களுக்கு இந்த லேகியம் ஈடு இணையற்ற சிறந்த மருந்தாகும். மூளை முதலான உடலில் உள்ள இராஜ உறுப்புகளை வலுப்படுத்தும், இரத்திலுள்ள மாசுகளை நீக்கி இரத்த அழுத்தத்தை சீர்படுத்தவும், உடலுக்கு புது பொலிவை உண்டாக்கும்.
ஒளசதம்
Owshadham
- செம்பருத்தி பூ மருத்துவ குணங்கள்
- இருதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க சூரணம் செய்முறை
- கழுதை பால் பயன்கள்
- ஆரா சக்தியின் நன்மைகள்
- கழுதை பால் பயன்கள்