மூலிகை சாப நிவர்த்தி, மூலிகை சாப நிவர்த்தி செய்வது எப்படி, மூலிகை சாப நிவர்த்தி செய்யும் முறை, சாப நிவர்த்தி மந்திரம், சாபம் நிவர்த்தி, உடல் சாப நிவர்த்தி மந்திரம், மூலிகை சாப நிவர்த்தி செய்வது எப்படி, மந்திர சாப நிவர்த்தி, முலிகை சாப நிவர்த்தி, நாயுருவி சாப நிவர்த்தி, எந்திர சாப நிவர்த்தி, உடல் சாப நிவர்த்தி, saba nivarthi, saba nivarthi seivathu eppadi, saba nivarthi manthiram, saba nivarthi mantra, saba nivarthi manthiram tamil, saba nivarthi temple, saba nivarthi tamil, mooligai saba nivarthi mantram, udal saba nivarthi manthiram, mooligai saba nivarthi manthiram, manthira saba nivarthi, mooligai saba nivarthi manthiram tamil, mooligai saba nivarthi manthiram, mooligai saba nivarthi mantram, mooligai saba nivarthi manthiram tamil, siddharkal sitthukal, mooligaikalukku siddharkal sabam, sapam, saba nivarthi manthiram guru theetchai, saba nivarthi manthiram payan paduthuthal, sollum murai, mooligai edukkum natkal, saba nivarthi manthira vakaikal.siddharkal sonna ragasiya manthiram.
மூலிகையும் சித்தர்களின் சித்துக்களும்
சித்தர்கள் மூலிகைகளை கொண்டு மாயமாக மறைந்தல், காயகற்பம், வசியப்படுத்துதல், வசிய மை, மோகம், தம்பனம், கர்ம வினை நீக்குதல், வாதம் செய்தல், கூடுவிட்டு கூடுபாய்தல், இரும்பை செம்பாக்குதல், மாத கணக்கில் உணவு உண்ணாமல் இருப்பது, தம்பனம், 10 போர் தூக்க முடியாத பாறைகாளை ஒருவர் தூக்கி எறிவது இது போன்ற பலவித சித்து விளையாட்டுகள் செய்துகாட்டி பல வித கொடிய நோய்களையும் குறுகிய காலத்தில் குணப்படுத்தினார்கள். சித்தர்கள் செய்து காட்டிய சித்துக்கள் பல ஜால வித்தைகல் மற்றும் கொடிய நோய்கான மருந்து செய்முறையும் சித்தர்களின் நூல்களில் சில தெளிவாகவும் பரிபாசையாகவும் உள்ளது.
மூலிகைகளுக்கு சித்தர்களின் சாபம்
சித்தர்கள் செய்து காட்டியவைகள் கொடியவர்களின் கைகளில் சிக்கினால் தவறான செய்களுக்கு பயன்படுத்தி விடுவார்கள் என நினைத்து அதை தடுக்க பெரும் அளவு மூலிகைகளுக்கு சாபமிட்டு வைத்தனர். இந்த சாபத்தை போக்க சித்தர்கள் சாபநிவர்த்தி மந்திரத்தை கூறி அதிலும் கட்டுபாடுகளை வகுத்து வைத்துள்ளனர்.
சாப நிவர்தி மந்திரம் குரு தீட்சையாக பெற வேண்டும்.
சாப நிவர்த்தி மந்திரத்தை குருவின் மூலமாக சித்தர்கள் கூறிய முறைப்படி தீட்சையாக வாங்கி. அதன் பின் ஓடுகின்ற இடுப்பளவு ஆற்று நீரில் நின்று உடல் கட்டு, திசைகட்டு இட்டு 1008 உருவேற்ற வேற்றி சித்தி செய்து வைத்து கொள்ள வேண்டும். உடல் கட்டு, திசைகட்டு அறியாதவர்களுக்கு மந்திர தீட்சை பெற்ற குருவே அதனை செய்து வைப்பார்கள். குரு வழி இன்றி தன்னிச்சையாக உருவேற்றினால் சித்தி ஆகாது அல்லது சாபம் நீங்கமல் நிற்க்கும்.
சாப நிவர்தி மந்திரம் பயன்படுத்துதல்
எந்த மூலிகளை எடுக்க வேண்டுமோ அந்த மூலிகையின் அருகில் மனமும், தேகமும் சுத்தம் உடையவராய் சென்று மூலிகை உள்ள இடத்தை சுத்தம் செய்து, மூலிகையை ஜலத்தினால் சுத்தம் செய்து, காப்புகட்டி, திலகமிட்டு சாபநிவர்த்தி மந்திரத்தை ஒன்பது முறை ஓதி சூரியனை நினைத்து எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
சாப நிவர்த்தி மந்திரம்
ஓம் குரு பிரம்ம - குருசிவம் - குருவிஷ்ணு சரஷாத் குருமயம் ஜெகத்குருமூலி - சிவமூலி - சத்திமூலி - விஷ்ணுமூலி பிரம்மமூலிஓம் குருசாபம் நசி - சிவசாபம் நசி சத்திசாரம் நசிபிரம்மசாபம் நசி - அகஸ்தியரிட்ட சர்வசாபமும்நசி-மசி, மசி - நசி, ஓம் சுவாஹா.
மூலிகை எடுக்கும் நாட்கள்
மூலிகைகளை நினைத்த நாட்களில், நினைத்த நேரத்தில் எடுக்க கூடாது அதற்குறிய கால நேரத்தில் எடுப்பது மட்டுமே சிறப்பாக அமையும். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் சூரிய உதயம் ஆரம்ப காலத்தில் உடல், மனம் சுத்தியுடையவராய் சென்று மந்திரத்தை கூறி எடுக்க வேண்டும் என்று சித்தர் பாடல்களில் தெளிவாக கூறியுள்ளனர்.
சாப நிவர்தி மந்திரம் ஒன்று மட்டும் அல்ல
மேற்க்கூறிய மந்திரம் பொதுவான சாப நிவர்தி மந்திரம் மட்டுமே இம் மந்திரம் மருத்துவத்திற்கும், சில மாந்திரீக வேளைக்கு மட்டுமே பயன்படும். மோகனம், தம்பனம், வசியம், இரசவாதம், பஞ்சபட்சி மூலிகைகள் ஒவ்வொன்றிற்கும் தனி தனி சாப நிவர்த்தி மந்திரங்கள் உள்ள அவற்றை தங்கள் குரு வழியாக தீட்சை பெற்று பயன்படுத்தி கொள்ளலாம். மந்திரங்கள் குரு தீட்சை இன்றி தானாக முயற்சி செய்த யாரும் வெற்றி பெற்றதில்லை மாறாக பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இதில் சித்தர்கள் சூட்சமம் அடங்கியுள்ளது.
மூலிகை சாப நிவர்தி செய்யாமல் எடுத்தல்
சித்தர்கள் கூறிய படி சாப நிவர்தி செய்யாமல் மூலிகைகளை எடுத்து மருத்துவத்திற்கோ அல்லது மாந்திரீகத்திற்கோ தன்னிச்சையாக பிடிங்கி பயன்படுத்தினால் அதன் முழு பலனை அடைய முடியாது. மூலிகை எடுப்பவர்களுக்கு பீனிச நோய் உண்டாகும், சித்தர்கள் மூலிகைகளுக்கு கொடுத்த சாபம் எடுத்தவரை தாக்கும். மூலிகை எடுத்த பின் அதன் உயிர் அதன் உடலில் தங்காது.