சித்த மருத்துவ லேகியம் செய்வது எப்படி
லேகியம் செய்முறை :-
லேகியம் செய்ய தேவையான மூலிகைகளை நிலழ்புட மாக உலர்த்தி, சுத்தி செய்ய வேண்டிய மூலிகைகளை சுத்தி செய்து நன்கு பொடி செய்து மெல்லிய துணியால் சலித்து இளஞ்சூட்டில் சூடுபடுத்தி வைத்து கொள்ள வேண்டும், மூலிகைகளை மருத்துவ குறிப்பில் கொடுக்கபட்ட அளவுக்கு மிகாமல் சேர்க்கவும். தவறும் பட்சத்தில் மருத்துவ தன்மை மாறிவிடும்.
தேவையான அளவு சுத்தமான கருப்பட்டியை எடுத்து சுத்தமான நீரில் கரைத்து பின் அதை வடிகட்டி கல் மண் நீக்கி லேகியம் செய்யும் இரும்பு வானலையில் ஊற்றிக் கொள்ளவும். உங்கள் இஷ்ட தெய்வங்கள் அல்லது சித்தர்களை வணங்கி அடுபில் தீயிட்டு வானலையை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
நீரில் கரைந்த கருப்பட்டி கம்பி பதம் வரும் வரை காய்ச்சியபின் அதில் சிறிது சிறிதாக தூவி கிளர வேண்டும். கட்டி பிடிக்காமல், கெட்டியாக விடாமல் கிளரியபின் அதில் தேவையான அளவு நெய் சேர்த்து கிளரி இரக்கி நன்கு ஆறிய பின் தேன் சேர்க்கவும்.
இந்த லேகியத்திய கைபடாமல், ஈரம் படாமல் சீசா பாட்டில்களில் சேமித்து வைத்து கொண்டு மருத்துவ குறிப்பில் கொடுக்கபட்ட அளவிற்க்கு மிகாமலும், குறையாமலும் கொடுக்க நோய் குணமாகும்.
குறிப்புகள்;-
மருந்து செய்பவர் மருந்து செய்யும் முன் விளையாட்டாக என்னாமல் நன்கு குளித்துவிட்டு சித்தகளிடம் தான் செய்யும் மருந்து குற்றம் இன்றி நோய்களை குணமாக்கும் மருந்தாக அமைய வேண்டும் என்று வேண்டி, லேகியம் செய்யும் பாத்திரத்தை கழுவி சுத்த படுத்தி பொட்டிட்டு சிறிய மாலை போட்டு பின் லேகியம் செய்ய குற்றம் இல்லாத மருந்தாக கிடைக்கும். செய்தவற்றில் மூன்றில் ஒரு பங்கை தானம் கொடுக்க வேண்டும் என்பது சித்தர் மரபு.
நன்றி வாழ்க வளமுடன்
ஓளசதம்
லேகியம் வகைகள்
siddha legiyam legiyam in english, legiyam preparation in tamil and english legiyam eppadi seivathu, legiyam seimurai, thaathu pusti legiyam legiyam maruthuva legiyam, skm legiyam.
லேகியம் செய்முறை விளக்கம், லேகியம் செய்ய தேவையான மூலிகைகள், லேகியம் எப்படி செய்ய வேண்டும், சித்தர்கள் லேகியம், சித்த மருத்து தன்மையுடை லேகியம்.