சுக்கு
ஆங்கிலம் : Dry Ginger
தமிழ் : சுக்கு
சுக்கு குணமாக்கும் நோய்கள்
ஒரு துண்டு சுக்கைத் தோல் நீக்கிக் கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பால், சர்க்கரைச் சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர வாயு அகலும், பசியுண்டாகும். தலை நோய், சீதளம், வாத குன்மம், விலாக்குத்து, வயிற்றுக்குத்து, நீர்ப்பீனிசம், நீர் ஏற்றம், நீர்க்கோவை, கீல் பிடிப்பு, ஆசன நோய், பல்வலி, காதுக் குத்தல், சுவாச ரோகம் தீரும்.
வயிற்றுக் கோளாறுகள்
சுக்கு 10 கிராம், சீரகம் 35, ஓமம் 10, உப்பு 4 மிளகு 5, பூண்டுப்பல் 3,கல் ஓட்டில் வறுத்து, 5 கிராம் வேப்பங்கொழுந்துடன் நைய அரைத்து, 50 மி.லி. வெந்நீரில் கலந்து வடிகட்டிக் குழந்தைகளுக்கு அரைச் சங்கு தாய்ப்பால் கலந்து 2 முதல் 4 வேளை கொடுக்க வயிற்றுக் கோளாறுகள் தீரும்.பேதியாக
சுக்கு, கடுக்காய்ப்பிஞ்சு, சூரத்து ஆவாரை வகைக்கு 10 கிராம் அரை லிட்டர் நீரில் இட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி, 10 கிராம் பேதி உப்பு கலந்து சாப்பிட ஆயாசமின்றி பேதியாகும். மோர் சாப்பிடப் பேதி நின்று விடும்.பல் ஆட்டம், பல் சொத்தை, இரத்தக் கசிவு
சுக்கு, காசுக்கட்டி, கடுக்காயத்தோல், இந்துப்பு சமனளவு பொடி செய்து பற்பொடியாகப் பயன்படுத்தலாம். பல் ஆட்டம், பல் சொத்தை, இரத்தக் கசிவு தீரும்.sukku, sukku maruthuva payankal, pal sotthai, pethiyaga, pal aatam, ratthakasivu, vayitru kolaru, more, uppu milaku nei sukku maruthuva gunangal, thaaipaal. sukku seivathu eppadi, sukku in english dry ginger
லூஸ் மோசன் தூண்ட, உண்டாக, ஜிஞ்ஜர், ஜிஞ்சர்,