ஆதொண்டை - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, September 1, 2015

ஆதொண்டை

ஆதொண்டை
ஆதொண்டை
தனியிலைகளைக் கொண்ட முள்ளுள்ள ஏறு கொடி. செந்நிறப் பூக்களையும் சதைக்கனியையும் கொண்டது. காய்கள் சமைத்து உண்ணக் கூடியவை. வேலிகளில் தானே வளர்கிறது.
ஆதொண்டை கீரை, கொடி வகையை சேர்ந்தது. தடிப்பான இலைகளை கொண்டது. துளிர்விடும் பொழுது மஞ்சள் நிறமாகவும் முற்றிய இலைகள் பச்சை நிறத்திலும் இருக்கும்.இதன் காய்கள், இலை வடிவிலேயே இருக்கும். இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.

மருத்துவப் பயனுடைய பகுதி

இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

நோய் நீக்கி உடல் தேற்றவும், பசிமிகுக்கவும் நாடிநடையை மிகுத்து உடல் வெப்பந் தரவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இலை

இலையை நெய்யில் வதக்கித் துவையலாக்கி உணவுடன் கொள்ளச் சுவையின்மை, பசியின்மை நீங்கி பசியுண்டாகும். 50 கிராம் வேர்ப்பட்டையை நன்கு சிதைத்து 1 லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி. ஆகக் காய்ச்சி வடித்து 3 பங்காக்கிக் காலை, மதியம், மாலை சாப்பிட்டு வரப் பசியின்மை, வாந்தி, மார்பு வலி ஆகியவை தீரும்

Ceylon caper • Bengali: kalokera • Gujarati: ગોવિંદકળ govindakal, kakhbilado, karrallura • Hindi: ardanda, jhiris • Kannada: ಮುಳ್ಳುಕತ್ತರಿ mullukattari, totulla • Konkani: वाघांटी vaghamti • Malayalam: karthotti • Marathi: गोविंदी govindi, कडूवाघांटी kaduvaghanti, वाघांटी vaghanti • Nepalese: ban kera • Punjabi: ਗਰਨਾ garna, ਕਰਵੀਲਾ karwila, ਕਰਵੀਲੂੰ karwilun • Rajasthani: gitoranj • Sanskrit: करम्भ karambha, तपसप्रिय tapasapriya, व्याघ्रनखी vyaghra nakhi • Tamil: ஆதொண்டை atontai, காற்றோட்டி karrotti • Telugu: ఆరుదొండ arudonda