நல்ல சகுணங்கள்
நாம் முக்கிய வேலையாக வெளியில் செல்லும் போது மங்கல வாழ்த்தொலி எழுப்புதல், வழி அனுப்பும் போது நல்ல வார்த்தைகளை செல்லி அனுப்பி வைத்தல் நல்லது
வெளியில் செல்லும் போது எதிரே வர வேண்டியவைகள்
யானைம், குதிரை, பசு, கன்றுடன் கூடிய பசு காளை, கன்னி, பல் அந்தனர்கள், இரத்தினம், எரியும் நெருப்பு தானியம், தயிர்பானை தானியம், சந்தனம், பிணம், பூர்ணகும்பம், அட்சதை வெள்ளை மாலை, குழந்தையுடன் பெண், எள், சலவைத்துணி, காளை, தாமரை, ஆடை ஏதும் அணியாத குழந்தை, சங்கு, நெய், பால், வாத்திய ஒலி, மாமிசம் போன்றவைகள் எதிரே வந்தால் நல்ல சகுணங்கள் ஆகும்.
கருடன், வலியன், காடை, கழுகு, உடும்பு, ஆந்தை, கீரி, குரங்கு இவை அனைத்தும் இடமிருந்து வலப்பக்கமாக சென்ற காரியம் வெற்றிகிட்டும் என்பது நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்த நம்பிக்கையாகும்.
மொட்டை மாடியில் சிலர் தூங்குவார்கள்.
அப்படிப்பட்டவர்கள், சூரியனின் வெளிச்சம் மேலே படரும் வரை தூங்கக் கூடாது.
அப்படிச் செய்தால் தரித்திரம் உண்டாகும். எந்தக் காரியம் செய்தாலும் தாமதம்
ஏற்படும்.
புது வீட்டிற்குப் போகும் போது, ஏற்கெனவே பழைய வீட்டில்
இருந்து தீபம் ஏற்றிக் கொண்டு செல்வதைவிட, புது வீட்டிற்கு வந்து வாசல்
படியில் இருந்து தீபம் ஏற்றி புது வீட்டிற்குள் செல்வதே நல்லது
வெளியில்
செல்லும்போது கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு யாராவது எதிரே வந்தால்,
அது நன்மை இல்லை. அப்படி யாராவது உங்கள் எதிரில் வந்தால், சிறிது நேரம் கழித்து
செல்லலாம். அதே சமயம், கூந்தலை விரித்து இருந்தாலும் அதில் பூச்சூடி வந்தால் நன்மையே. சுப காரியங்கள் பேசும்போது கூந்தலை அவிழ்த்துவிட்டு வாரக் கூடாது.
காலையில் எழுந்திருக்கும்போது
நம் கண்களுக்கு நேராக சிறு தீபம் எரிந்தால் நல்லது. மின் விளக்காகக் கூட
இருக்கலாம். வெளிச்சத்தை பார்த்து எழுந்தால், நன்மைகள் பல ஏற்படும். ஜோதி
வடிவமே சுப சகுனம்.
nalla sagunam, ketta saguanam, saguanam parpathu eppadi, sagunam enraal enna, veliyea sellumpothu ethirea varavendiyavai kal.