நரி வெங்காயம், காட்டு வெங்காயம் - Nari vengayam kaatu vengayam - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, May 21, 2015

நரி வெங்காயம், காட்டு வெங்காயம் - Nari vengayam kaatu vengayam

நரி வெங்காயாம் அல்லது காட்டு வெங்காயம்



நரி வெங்காயம் அல்லது காட்டு வெங்காயம்

தாவரவியல் பெயர் : Urginea indica (ROXB) KUNTH 

            English :                  Indian Squill, Sea onion 

பொதுவான பெயர்கள் :  

                    நரி வெங்காயம், காட்டு வெங்காயம், காட்டு வெள்ள வெங்காயம், கோழி வெங்காயம், விரல்கலாங்கிழங்கு என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. 

                   இது தமிழகத்தின் பல பகுதிகளில் மலைகள் மற்றும் தரிசு நிலங்களில் தானாக வளரக்கூடியது. குறிப்பாக தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அதிகமாக காணப்படுகிறது. இது சித்த மருத்துவம், ஆயுர்வேதிக், நாட்டு மருத்துவத்திலும் பயன்படுத்தப் படுகிறது.

                 பார்ப்பதற்கு அசல் வெங்காயத்தைப் போலவே காட்சி அளிக்கும் அதிக நேரம் கையில் வைத்திருந்தால் கையில் அரிப்பு ஏற்படும். இதில் அதிக விச தன்மை இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கிராமபுறத்தில் முன்னோர்கள், இந்த வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எதிரிகளின் கோழிகளுக்கு போட்டு கொன்றதாக கூறப்படுகிறது. இது அரிய மூலிகைத் தாவரமாகும்.
நரி வெங்காயம் மருத்துவ பயன்

                 நரி வெங்காயம் எனப்படும் இது, தெடர் இருமல், மூச்சுக்குழாய் வியாதிகள்,   இதய கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகும். மேலும் பாம்பு நஞ்சை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது. கோழைகட்டு, இருமல், இரைப்பை, மூலம், கால் ஆணி மற்றும் புற்று நோய் ஆகியவற்றை குணமாக்கும் ஆற்றல் கொண்டது.

                இதில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையானது உடல் மற்றும் கண் எரிச்சலை குணப்படுத்தும்

                நரி வெங்காயத்தின் பொடி தெடர்ந்து சாப்பிட்டு வர மூலம், பிஸ்துலா ஆகியவை விரைவில் குணமாகும்.
முக்கிய குறிப்பு :-

              நரி வெங்காயத்தை எந்த விதமான அனுபவம் இன்றி உட்கொள்ள கூடாது இது விசத்தன்மை உடையது. அனுபவமிக்க சித்த மருத்துவரின் அலோசனையின் படி மிகச் சிறிய அளவு மட்டுமே மருந்தாக பயன்படுத்த வேண்டும். 

           நரி வெங்காயத்தை ஓர் அதிசிய மூலிகை எங்கும் கிடைக்காதது என்று பொய்யான வார்தைகளை கூறி பல ஆயிரங்களை பரித்துவருகின்றனர் தயவு செய்து நம்பி ஏமாறாதீர்கள்.


keyword: acukkayam, cevakam 1, cevakan, cevukan, ciruvenkayam, kaattu vengayam, kakunarakavulli, karunarakam, karuvulli, katterumai 3, kattirulli, kattu venkayam, kattulli, kattullikkilanku, kattuvelvenkayam, kattuvengayam, kattuvenkayam, kirincanam 2, nari-vengayam, narivengayam, narivenkayam 1, narivenkayam, narivenkayam, nayulli, nir venkayam, peyanulli, peyanullicceti, peyppariti, peypparitiyulli, peyulli, peyvenkayam, peyvenkayam