குப்பைமேனி மருத்துவ பயன் - kuppaimeni maruthuva payan - ஔசதம் - OWSHADHAM -->

Monday, May 4, 2015

குப்பைமேனி மருத்துவ பயன் - kuppaimeni maruthuva payan

குப்பைமேனி மருத்துவ பயன் - kuppaimeni maruthuva payan



குப்பைமேனி, குப்பைமேனி இலை,குப்பைமேனி செடி, குப்பைமேனி கீரை, குப்பைமேனி இலை சமையல், குப்பைமேனி வேர், குப்பைமேனி மருத்துவ குணங்கள், குப்பைமேனி வசியம், குப்பைமேனி சமையல், குப்பைமேனி பொடி, குப்பைமேனி பயன்கள், kuppai meni maruthva payan, keerai, ver, maruthuva kunangal, samiyal, kuppai meniu podi, payankal
குப்பைமேனி
குப்பைமேனி, குப்பைமேனி இலை,குப்பைமேனி செடி, குப்பைமேனி கீரை, குப்பைமேனி இலை சமையல், குப்பைமேனி வேர், குப்பைமேனி மருத்துவ குணங்கள், குப்பைமேனி வசியம், குப்பைமேனி சமையல், குப்பைமேனி பொடி, குப்பைமேனி பயன்கள், kuppai meni maruthva payan, keerai, ver, maruthuva kunangal, samiyal, kuppai meniu podi, payankal
இந்தியா முழுவதும் காணப்படும் குப்பைமேனி செடி, ஒரு அடி உயரமுள்ளது. சிறிய, பல கிளைகளுடன் அடர்த்தியான செடி. இதன் இலையில் ஒரு ரூபாய் அளவு மஞ்சள் புள்ளிகள் காணப்படலாம். இலையின் ஓரம், ரம்பத்தின் பற்கள் போலிருக்கும். பூக்கள் வெண்மையாக, மிகச்சிறியதாக இருக்கும். காய்கள் மிளகு போல், பச்சையாக இருக்கும்


மருத்துவ பயனுடைய பகுதி


இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.

அகத்தியர் குணவாகடம்

"இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய் 
யிலயட்டியிலை மேனியை யா"


குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.


குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.
 


 குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.

குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.

மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.

குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.


தேரையர் குணபாடம்



"தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்"
 

பொருள் - குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்க


குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

சொறி, சிரங்கு நீங்க

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.