ஆப்பிள் மருத்துவ பயன் - apple maruthuva payan
இரத்தம்
இரத்தத்திற்கு செந்நிறம் தரும் இமோக்கிளோபின் ஆப்பிளில் மிகுதியாக உள்ளது. உதிரப் போக்கை நிறுத்தும் சக்தியும், இரத்தத்தைச் சுத்தி செய்யும் ஆற்றலும் இதற்குண்டு. தொடர்ந்து உண்போர் உடலில் மினுமினுப்பும் கவர்ச்சியும் சேரும்.
பற்கள்
தினமும் ஆப்பிளை மென்று சாப்பிட்டு வந்தால், பற்கள் வலுவடையும். ஈறுகளில் புண்கள், வலி, இரத்தம் வருதல் போன்றவற்றை ஆப்பிள் தடை செய்யும். அப்பிளில் புரோட்டீன் 0.8, கொழுப்பு - 1, சர்க்கரை 13.4 பங்குகள் உள்ளன. தவிர வைட்டமின் ஏ,பி,சி, சோடியம் பொட்டாசியம் போன்றவையும் உள்ளன.
மலமிளக்கி
கல்லீரரைலச் சுறுசுறுப்பாக்கும் ஆற்றலும், குடற்கிருமிகளைக் கொல்லும் சக்தியும் இதற்குண்டு. குழந்தைகளுக்கும் ஆப்பிள் தரலாம். இது நல்ல மலமிளக்கி. பேதியாகும் குழந்தைகளுக்கு வேக வைத்துப் பிசைந்து தரலாம்.
ஆப்பிள் சாறு
ஆப்பிளில் உள்ள பாஸ்பர சத்து மூளைக்கு வலிமையும், தெளிவும் தரும். மூளைக்கோளாறு உள்ளவர்களுக்கு இது மாமருந்து, வாத நோய், நரம்புத் தளர்ச்சி, உறக்கம் வராமை, தூக்கத்தில் புலம்பல், நடத்தல் போன்ற நரம்புக் கோளாறுகளுக்குக் காலை, மாலை ஓர் ஆப்பிள் வீதம் சாறு பிழிந்து கொடுத்தால் குணம் தெரியும்.
மனநோய்
உழைப்பாளர்கட்கு ஆப்பிள் சாறு களைப்பு நீக்கி, புதுத் தென்பும் மன வலிவும் தருவதுடன் இதயமும், நரம்பு மண்டலமும் புது ஆற்றல் பெறச் செய்யும்.