ஓரிதல்தாமரை மருத்துவ பயன் - Orithathamaai maruthuva payan
மாற்றடுகில் அமைந்த இலைகளையும் சிவப்பு நிறமுள்ள ஒரே இதழுடைய மலர்களையும் உடைய குறுஞ்செடி. தமிழகத்தின் எல்லா
மாவட்டங்களிலும் தானே வளர்கிறது.செடியின் எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.
ஓரிதழ் தாமரை மருத்துவ பயன்
தாது வெப்பு அகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.இலையை நாள்தோரும் விடிவதற்கு முன் சிறிதளவு மென்று தின்று பால் அருந்தி வர ஒரு மண்டலத்தில் தாதுஷீனம், அதிமூத்திரம், வெள்ளை, சூடு, நீர் எரிச்சல், சிற்றின்பப் பலவீனம் ஆகியவை தீரும்.
ஓரிதல் தாமரை இலை, கீழா நெல்லி இலை, யானை நெரிஞ்சில் இலை மூன்றையும் ஒரு பிடி அளவு அரைத்து 200 மி.லி எருமைத் தயீரில் 10 நாள்கள் சாப்பிட நீர்த்தாரை ரணம்,வெள்ளை ஒழுக்கு ஆகியவை தீரும். (மருந்து செரித்த பின் காரமும்,சூடும் இல்லாத உணவு சாப்பிட வேண்டும்.)
இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம். ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் ஓரிதழ் தாமரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
- உடல் சூட்டை தனித்து நல்ல குளிர்ந்த தேகம் கிடைக்கும்
- சிறு நீர் எரிச்சல் நீங்கும்
- கண்களில் இருக்கும் புகைச்சல் தீர்ந்து நல்ல் தெளிவான பார்வை கிடைக்கும்
- காமாலை நோய் உடலை தாக்காது
- உடல் வறட்சி நாக்கு வறட்சி போன்றவை நீங்கும்
- உடலை துன்படுத்தும் பித்தம் சீராகும்
- இதன் பலனால் நாடி சீராக இயங்கும்
- இரத்தம் தூய்மையாகி ஆரோக்கிய தேகம் கிடைக்கும்.
- இது உடல் வலுவுக்கு மிக சிறந்த மருந்து.
- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும்.