கருவேல் மருத்துவ பயன் - Karuvel Mauthuva payan
![]() |
கருவேல் மருத்துவ பயன் - Karuvel Mauthuva payan |
இரட்டடைச் சிறகமைப்பு கூட்டிலைகளையுடைய வெண்மையான முள்ளுள்ள உறுதியான மரங்கள்.மலர்கள் மஞ்சள் நீறமானவை.காய்கள் வெண்ணீறமான பட்டை வடிவமானவை.விதைகள் வட்டவடிவமானவை. தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது.
இந்த மரங்கள் மண்ணில் உள்ள ஈரப்பதத்தை அதிக அளவு உறிஞ்சும், மழை பெய்யும் வாய்ப்பை குறைக்கும், நிலத்தடி நீர் வளத்தை குறைத்து விடும். இந்த மர வேர்களுக்கு மற்றவைகளை காட்டிலும் தண்ணீர் உறிஞ்சும் தன்மை அதிகம். காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை உடையது.
கருவேல் மருத்துவ பயன்
கொழுந்து,இலை வேர்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.இலையை அரைத்துப் புண்கள் மீது வைத்துக் கட்ட விரைந்து ஆறும்.துளிர் இலைகளை 5 கிராம் அளவுககு மசிய அரைத்து மோரில் கலக்கிக் கலை மாலையாகக் குடித்து வரச் சீதக் கழிச்சல் வெப்பக் கழிச்சல் பாஷாண மருந்து வீறு ஆகியவை தீரும்.
இலையை அரைத்து இரவு தோறும் ஆசனவாயில் வைத்துக் கட்டி வர மூலம் குணமாகும்.