கள்ளிமந்தாரை, கப்பல் அலரி, ஈழத்து அலரி, பெருங்கள்ளி நாவில்ல மருத்துவ பயன் - kallimanthaarai, kappal alari, eelathu alari.
இது ஓர் அயல் நாடு தாவரமாகும், தற்ப்போது தமிழகதிலும் வீட்டு தோட்டங்கள், மருத்துவ மனை, பூங்கா ஆகிய வற்றில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதன் கிளைகள் ஒழுங்கற்றும் கிளைகளின் நுணிப்பகுதியில் இலைகள் காணப்படும். இதன் இலைகள் கடிணமானவை. இதன் கிளையையே அல்லது இலையே ஒடித்தால் பால் வெளியேறும். பூக்கள் மஞ்சள், சிகப்பு, வெள்ளை நிரங்களில் இருக்கும். வ்ருடம் முழுவதும் பூக்கள் காணப்படும்.
பplumeria rubra, pagoda tree, red jasmin in tamil கள்ளிமந்தாரை
இம்மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ பயன்கள் நிரைந்து காணப்படுகிறது. இதன் பூ,தண்டு, பால், வேர் பட்டை ஆகியவை மூலிகை மருத்துவத்திற்கு பயன்படுத்தப் படுகிறது.
மருத்துவ பயன்கள்:-
காய்ச்சல், காலரா மற்றும் அஜீரணம் ஆகியவறை குணப்படுத்த முழு செடியையும் பயன்படுத்தப் படுகிறது.
இச்செடியில் கிடைக்கும் பால் வயிற்று போக்கினை தூண்டும் தன்மை உடையது.
ஈறு வலி, சிவந்த தேகம், முடக்கு வாதம், சொறி, ஆகியவற்றை குணப்படுத்த மேற்பூச்சாக பயன்படுகிறது.
பூக்கள் கர்பமாவதை தடை செய்யும், கரு சிதைவினை தூண்டும்.
இதன் இலைகள் காய்ச்சலை முழுமையாக குணப்படுத்தும்
இலைகளை நன்றாக் அறைத்து வீக்கங்களின் மீது பூச விறைவில் குணமாகும்.
பட்டையின் கசாயம் மாதவிடாயை தூண்டும், பால் வினை நோய்களுக்கும் பயன்படுகிறது.
இதன் வேர்பட்டை தேமல், தோல் வியாதியை குணப்படுத்தும். மிகச் சிறந்த பேதி மருந்து.