வெள்ளைப் பூண்டின் மருத்துவ பயன்கள் - vellai poondin maruthuva payan - ஔசதம் - OWSHADHAM -->

Friday, February 27, 2015

வெள்ளைப் பூண்டின் மருத்துவ பயன்கள் - vellai poondin maruthuva payan


வெள்ளைப் பூண்டின் மருத்துவ பயன்கள்
வெள்ளைப் பூண்டின் மருத்துவ பயன்கள் owshadham ஔசதம்
வெள்ளைப் பூண்டின் மருத்துவ பயன்கள்


உடல் பருமைனயும், இரத்தத்தில் எல்ல கொழுப்பையும் குறைக்கும் இதய அடைப்பை நீக்கும்.

இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.

இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு
விளங்குகிறது.

நாள் பட்ட சளித் தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.
மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
தாய்ப்பால் சுரக்கும்.

மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.
சளித்தொல்லை  நீங்க:

1. வெள்ளைப் பூண்டை பாலில் வேகைவத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடவும்.
2. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு
வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.
3. மிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெய்யிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோலூரிக்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.

காது  அடைப்பு,  வலி நீங்க

நல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட வேண்டும்.
குறிப்பு: 
 பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில்
பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

வெள்ளைப் பூண்டு, vellai poondu, vellaip poondu maruthuva payankal, vellai poondin maruthuva payankal, vellai poondin maruthuva payangal, kaathu vaithiyam in tamil, kaathu vali mooligai, kaathu mooligai, noi ethirppu sakthi mooligai, mooligaikal in tamil,