இஞ்சி மருத்துவ பயன்கள் - ஔசதம் - ஔசதம் - OWSHADHAM -->

Friday, February 27, 2015

இஞ்சி மருத்துவ பயன்கள் - ஔசதம்


இஞ்சி மருத்துவ பயன்கள்
இஞ்சி மருத்துவ பயன்கள் owshadham
இஞ்சி மருத்துவ பயன்கள்
                          
இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில்
இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.
இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில்
சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.
மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து
சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.



ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.
பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை
தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். ( இஞ்சியை சுத்தம் செய்து
சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து அதனை காய வைத்தால் சுக்கு கிைடக்கும்)
இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில்,
சட்னி, பொங்கல், பொரியலில் சேர்த்து பயன் பெறலாேம. அப்படி செய்வதன்
மூலம் உணேவ மருந்தாகிவிடும்