தீப எண்ணெய் செய்யும் முறை - Deepa Ennai Seimurai - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, October 11, 2015

தீப எண்ணெய் செய்யும் முறை - Deepa Ennai Seimurai

பஞ்ச தீபம் எண்ணெய்  செய்யும் முறை

தீப எண்ணை செய்யும் முறை - Deepa Ennai Seimurai பஞ்ச தீபம் எண்ணை  செய்யும் முறை
பஞ்சதீபம்
             வீட்டின் பூஜை அறையில் விளக்கு வைக்க குறிப்பிட்ட சில எண்ணெய்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பஞ்சதீபம் எண்ணெய் தயார் செய்து தினமும் தீபம் ஏற்றி கடவுளின் அருள் பெறுக. இதனை செய்வதற்க்கு முன்பு குளித்து இறவனை வணங்கிய பின் செய்வதே அதன் முழுபலனையும் அடைய செய்யும்.

பஞ்ச தீபம் எண்ணெய்யின் பலன்கள்

பசு நெய் - கிரகதோஷம், செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்  - தாம்பத்ய விருத்தி, ஆரோக்கியம் அதிகரிக்கும்
வேப்ப எண்ணெய்  - ஐஸ்வர்ய யோகம், உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்
இலுப்பை எண்ணெய்  - சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்  -  புகழ், குல தெய்வ அருள் கிடைக்கும்

ஒரு லிட்டர் பஞ்சதீபம் எண்ணை  செய்ய தேவையானவைகள்.

  1. சுத்தமான பசு நெய்     - 200 மில்லி
  2. நல்லெண்ணெய்             - 350 மில்லி
  3. வேப்ப எண்ணெய்          - 100 மில்லி
  4. இலுப்பை எண்ணெய்    - 200 மில்லி
  5. விளக்கெண்ணெய்        - 150 மில்லி
மேலே குறிப்பிட்ட எண்ணெய்களை அதன் அளவு மாறாமல் ஒன்றாக சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொண்டு தினமும் தீபம் ஏற்றி பஞ்ச தீபம் எண்ணெய்யின் பலனை அடையலாம்.

தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

" கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா "
புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி. இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும் 


வாழ்க வளமுடன் 



pancha deepa ennai seimurai, pancha deepa ennaikal, pancha theepa ennaikal, deepam, deepangai, deepa ennai eppadi seivathu, deepam etrum pothu solla vendia manthirangal, vilakku manthirangal, deepam vaippathan palangal, vilakku ennaikal payangal, vilakku etravendai thisaikal. 
பஞ்சதீபம் எண்ணை, பஞ்சதீப எண்ணை, பஞ்ச தீப எண்ணை எப்படி செய்வது, பஞ்சதீபம் எண்ணை வகைகள், தீப எண்ணைகள். விளக்கு வைக்கும்  எண்ணை எப்படி செய்வது, விளக்கு வைக்கும் எண்ணைகள், தீபம் எண்ணைகள்