நந்தியா வட்டம் மருத்துவம் - Nanthiya vattam - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, May 17, 2015

நந்தியா வட்டம் மருத்துவம் - Nanthiya vattam

நந்தியா வட்டம் மருத்துவ பயன்


நந்தியா வட்டம், நந்தியா வட்டை, கண்வலி செடி, நந்தியா வட்ட, தகர், East indian rosebay தாவரவியல் பெயர் tabernaemontana  Nanthiya vattam
நந்தியா வட்டம்
 
பெயர்கள் name
                    நந்தியா வட்டம், நந்தியா வட்டை, கண்வலி செடி, நந்தியா வட்ட, தகர்,  East indian rosebay என்ற பெயர்களால் அழைக்கப் படுகிறது.  தாவரவியல் பெயர் tabernaemontana

                   நந்தியா வட்டம் இந்தியாவில் பல பகுதிகளில் தானாக வளர்ந்து வருகிறது. வீட்டில் அழகுக்காவும், அலங்கார தவரமாக வளர்க்கப்படுகிறது. இதன் பூக்கள் மணமுடையது வெண்மையான நிறத்தில் மல்லிகை பூவை போல இரு மடங்கு பெரியதாக கணப்படும். இதில் இரண்டு அல்லது மூன்று வகையான செடிகள் உள்ளன.

நந்தியா வட்ட செடியில் மருத்துவ பயனுடைய பகுதி.

                நந்தியா வட்டத்தில் ஒற்றை அடுக்கு பூ உடைய செடி மட்டுமே அதிக மருத்துவ தன்மையுடையது. இதன் இலை, வேர், வேர்ப்பட்டை மற்றும் தண்டு பகுதி மருத்துவத்தில் பயன் படுத்தப்படுகிறது.

நந்தியா வட்ட பூ nanthiya vatta poo

               இதன் பூக்களை பூஜை  மற்றும் மருத்துவத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் இப்பூவினை தலையில் அணிவது கூடாது.

மருத்துவ பயன்கள். maruthuva payan

               இலைகளை கில்லும் போது பால் போன்ற திரவம் கிடைக்கும் இதை புண்களினால் ஏற்படும் வீக்கத்தின் மீது தடவ வீக்கம் வற்றி குணம் கிடைக்கும்

              பூக்களை பரித்து கண்களின் மீது ஒத்தடம் கொடுக்க கண் எரிச்சல் குணமாகும் அல்லது பூவில் இருந்து சாறு எடுத்து நல்லெண்ணையில் காலந்து பயன்படுத கண் எரிச்சல் மற்றும் சிவந்த கண்கள் குணமாகும். 
இந்த எண்ணையை தோல் சம்பந்த பட்ட வியாதிகளுக்கு தடவ குணம் கிடைக்கும்.

வேர்பட்டை verpattai

             நந்தியா வட்ட செடியின் வேரில் இருந்து எடுக்கப்ட்ட பட்டையானது கசப்பு சுவையுடையது. வயிற்றுப் பூச்சிகள் நீக்க பயன் படுத்தப்படுகிறது. சிறிது மென்று துப்ப பல் வலி மறையும்.

தண்டு thandu

           இதன் தண்டு பகுதி உடலை குளிர் விக்க பயன் படுத்தப்படுகிறது.

           50 கிராம் நந்தியா வட்ட பூ, களாப் பூ 50கிராம் எடுத்து 200 மில்லி நலெண்ணையில் போட்டு இருபது நாட்கள் வெய்யில் புடம் போட்டு பின் வடி கட்டி நாள் ஒன்றுக்கு ஒரு சொட்டு வீதம் கண்ணில் விட்டு வர சகல கண்ணேய்களும் தீருந்து விடும் என மருத்துவ குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


nanthiya vattam , nanthiya vatta , nanthiya vattai , thakar , kanvali sedi , kanvali marunthu sedi , kan ericahl, nalennai , poojai pookkal , pujai , poojaikku etra pookkal.

கண்வலி மருந்து செடி, மல்லி, ஒற்றை அடுக்கு பூ, பூக்கள்.