சித்த மருத்துவம் செய்யும் முறை - siddha maruthuvam in tamil katturai - ஔசதம் - OWSHADHAM -->

Friday, March 22, 2019

சித்த மருத்துவம் செய்யும் முறை - siddha maruthuvam in tamil katturai

சித்த மருத்துவம் செய்வது எப்படி - Siddha maruthuam seivathu eppadi

சித்த மருத்துவம் செய்வது எப்படி, சித்த மருத்துவ மருந்துகள், சித்த மருத்துவம் கட்டுரை, சித்த மருத்துவ வரலாறு, சித்த மருத்துவம் பயன்கள், சித்த மருத்துவம் புத்தகம், சித்த மருத்துவ குறிப்புகள் pdf, சித்த மருத்துவ அறிவியல், தமிழ் மருத்துவம் கட்டுரை, சித்த மருத்துவம் என்றால் என்ன, சித்த மருத்துவம் படிக்க, சித்த மருத்துவம் புத்தகம், சித்த மருத்துவ மையம் coimbatore tamil nadu, சித்த மருத்துவம் புத்தகம் pdf free download, சித்த மருத்துவம் nanmaigal, siddha maruthuvam in tamil, siddha maruthuvam in tamil pdf, siddha maruthuvam tamil book, siddha maruthuvam katturai in tamil, siddha maruthuvam ariviyal, siddha maruthuvam ayurveda, siddha maruthuvam books in tamil, siddha maruthuvam books free download, siddha maruthuvam blogspot, siddha maruthuvam benefits, siddha maruthuvam for back pain, siddha maruthuvam college, siddha maruthuvam com, siddha maruthuvam details, siddha maruthuvam endral enna, siddha maruthuvam erode, siddha maruthuvam history in tamil, siddha maruthuvam herbal, siddha maruthuvam in tamil katturai, sisiddha maruthuvam in payangal

சித்த மருத்துவம் என்றால் என்ன?

சித்த மருத்துவமானது கலைகளில் ஓர் உயரிய கலை. சித்தா என்பது துறவிகளான சித்தர்கள் முயன்று, ஆராய்ந்து செயல்படுத்தி வெற்றி பெற்றதால் ‘சித்தா’ எனப்பெயர் பெற்றது. பதினெட்டு சித்தர்கள் இந்த சித்தமருத்துவத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தார்கள். அதன் பலனாக 4448 நோய்களுக்கும் அதற்குறிய மருந்துகளை மூலிகை மற்றும் பாஷாணங்களை கொண்டு கண்டறிந்து வெற்றி கண்டார்கள். இம்மருத்துவ முறைகள் அழிந்து விடாமல் இருக்க குரு வழியே சீடர்களுக்கும் கற்று கொடுத்தனர். சித்த மருத்துவம் கற்க்கும் முன் சித்தமருத்துவ அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும்.

சித்தமருத்துவ அடிப்படை

மூலிகைகள் அதன் குணங்கள், சத்துரு, மித்துரு, புடமிடல், எந்த மூலிகை என்னென்ன வேளை செய்யும், எந்த மூலிகையை எதனுடன் சேர்த்தால் எந்த நோயை குணமாக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். 64 பாஷாண வகைகள் உள்ளன அவற்றின் சுத்தி முறை, செந்தூரம், பற்பம், சுண்ண முறைகளை அறிந்து மருந்தாக்க வேண்டும் அத்துடன் சரியான அளவு முறைகளை பின்பற்ற வேண்டும்.

சித்த மருத்துவ மருந்துகள் வகைகள்

லேகியம், கசாயம், கிருதம், தைலம், குழம்பு, சுடர் தைலம், குழி தைலம், லேபனம், மூலிகை உப்பு, மூலிகை சக்கரை, மூலிகை சூரணம் இவைகள் மூலிகைகளை கொண்டு தயாரிப்பது. பற்ப்பம், சுண்ணம், செந்தூரம், மெழுகு, வேதை, இரசமணி மற்றும் பல இவைகள் உலோகம் மற்றும் பாஷாணங்களை கொண்டு செய்வது.

விஷமூலிகைகள்

மூலிகைகளில் சில விஷத்தன்மை உடையவை அவற்றில் இருக்கும் விஷத்தை நீக்க சுத்தி முறைகளை செய்ய வேண்டும், ஒவ்வொரு மூலிகைகளுக்கும் வெவ்வேறு விதமான சுத்தி முறைகள் உண்டு. நுல்களில் படித்து தெரிந்து கொள்ளாம், சேராங்கொட்டை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை.

சித்த மருத்துவம் கற்றல்

சித்த மருத்துவம் கற்க்க விரும்பவர்கள் முதலில் சரியான மூலிகைகளை அடையாளம் காணவேண்டும், ஒன்றை போலவே பல செடிகள் இருக்கும். தேவையான மூலிகைகளை எடுத்து நிழல் புடமிட வேண்டும், பின் அதனை கல்வத்தில் போட்டு அரைத்து சூரணம் செய்ய வேண்டும். பின் இச்சூரணத்தை லேகியம், தைலம் என அடுத்தடுத்த பரிணாமத்திற்க்கு கொண்டு சென்று நோய்களை குணமாக்கலாம்.

குருவழி கற்றல்

இம் மருத்துவத்தை குருவழியே கற்ப்பது மிகவும் சிறந்தது. குரு தொட்டு காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வராது என்பார்கள். குரு தனது குரு கற்று கொடுத்தது அத்துடன் சொந்த அனுபவம் இவைகளை கூறி கற்ப்பிப்பதால் எளிதாக கற்று கொள்ள முடியும் அத்துடன். பரிபாசைகள், ஆபத்த உயரிய பாஷாணங்கள், விச மூலிகைகளை மருந்தக்குவது போன்றவைகளை அனுபவ அறிவால் கற்றல் சிறப்பாகும்.

நோய் அறிதல்

நோய்காண அறிகுறி, நோயின் தீவிரம், நாடி நடை, உடல் தோற்றம், உடல் எடை, வயது, வாதம், பித்தம், கபம் இவைகளை கொண்டு கணக்கிட்டு மருந்தையும் அதற்க்கான பத்தியத்தையும் சொல்லி கொடுக்க நோய் தீரும்.

ஆலோசனை

சித்த மருத்துவம் கற்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் எளிமையான சித்த மருத்துவ நூல்களை வாங்கி படிக்க தொடங்குங்கள், மூலிகை பெயர்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள், அளவு முறைகளை கற்று கொள்ளுங்கள், எளிமையான சில மருந்துகளை செய்து பாருங்கள், பிறகு நல்ல சித்த மருத்துவரை அனுகி குருவாக வேண்டி மருத்துவம் கற்று கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்