லோதி,லோத்ரா,வெள்ளிலாதி மருத்துவ பயன்
லோதி,லோத்ரா,வெள்ளிலாதி |
பட்டை |
லோதி,லோத்ரா,வெள்ளிலாதி,லுத்துகா செட்டு என்று பல பெயர்களால் அழைக்கப் படுகிறது. வெள்ளிலாதி என்பதே தமிழ் பெயர் ஆகும்.
மருத்துவ பயனுடைய பகுதிகள்
இதன் தண்டு, பட்டை மருத்துவ பயனுடையவைகளாகும்
வெள்ளிலாதி மூலிகை குணப்படுத்தும் நோய்கள்
வயிற்று போக்கு. சீதபேதி, நீர்க்கோவை, பைலோரியா, யாணைக்கால். கல்லீரல் நோய்கள், நின்ற மாத்விடாய் மற்றும் கருப்பை கோளாறுகள் ஆகியவற்றினை குணப்படுத்த வெள்ளிலாதி மரத்தின் பட்டை மருந்து பொருளாக பயன் படுத்தப் படுகிறது. வீக்கத்திற்க்கு பட்டையை நன்கு அரைத்து பற்று போடப் படுகிறது.
பட்டை மற்றும் கட்டையை கொண்டு செய்யப்பட்ட கசாயம் கொண்டு வாய் கொப்பளிக்க பல் ஈறுகளில் ஏற்ப்படும் இரத்த போக்கினை குணப்படுத்தும், மற்றும் சளியினால் ஏற்ப்படும் தொண்டை கட்டுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இதன் தண்டுப்பகுதியில் இருந்து தயாரிக்கப் பட்ட பசையைக் கொண்டு கட்டிகளுக்கு மேற்ப் பூச்சாக பயன்படுத்த கட்டி பழுத்து உடையும்.