ஆடுதின்னா பாளை - ஔசதம் - OWSHADHAM -->

Monday, August 31, 2015

ஆடுதின்னா பாளை



ஆடுதின்னா பாளை ஆடுதின்னாப் பாளை பூச்சிக் கொல்லியாகவும் காய்ச்சல் யானைத் தோல் சொறி பாம்பு நஞ்சும் சுகப்பேறு விதைச் சூரணம்
ஆடுதின்னாப் பாளை
மாற்றடுக்கில் அமைந்த வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களையுடையது. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கிறது. பங்கம்பாளை என்றும் அழைப்பதுண்டு. எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.

பூச்சிக் கொல்லியாகவும்

வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும் பேறு கால வலியை மிகுக்கும் மருந்தாகவும் பயன்படும்.

காய்ச்சல்

 10 மி.லி. இலைச்சாறு காலை மாலை குடித்துவர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டுவிட்டுவரும் காய்ச்சல் குணமாகும்.

யானைத் தோல் சொறி

 இலைச்சூரணம் 2 சிட்டிக்கை வெ ந் நீரில் கொள்ளப் பாம்பு விஷம், சில விஷம், மலக் கிருமிகள், கருங்குட்டம், யானைத் தோல் சொறி தீரும்.

பாம்பு நஞ்சும்

வேரை அரைத்துக் காலை, மாலை 5 கிராம் கொடுத்துக் கடும் பத்தியத்தில் வைக்க (புதுப்பானையில் உப்பில்லாத பச்சரிசி பொங்கள், 24 மணி நேரம் தூங்க விடக் கூடாது) 3 நாள்களில் எல்லா விதப் பாம்பு நஞ்சும் தீரும்.

சுகப்பேறு

 வேர்ச் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை தீர்ந்து சுகப்பேறு ஆகும்.

விதைச் சூரணம்

விதைச்சூரணம் 5 கிராம் விளக்கெண்ணெயில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்றுவலி, சூதகத்தடை, முறைக் காய்ச்சல் மகப்பேற்றின் போது வேதனை, மலக்கிருமிகள் நீங்கும். 

aaduthinna paalai, aduthinna palai, aaduthinnapalai,magaperu, pampu visam, yaanai thol sori, kaichal, poochu kolliyagaum. aaduthinna palai ilai maruthuva payangal ஆடு தின்ன பாளை ஆடுதின்னாபாளை ஆடு தின்னாபாளை ஆடு தின்னாப் பாளை ஆடு தின்னாப்பாளை ஆடுதின்னாப்பாளை