அரச மரத்தை சுற்றி வருவது ஏன்? - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, July 29, 2015

அரச மரத்தை சுற்றி வருவது ஏன்?



              பொதுவாக கோவில்களில் அரச மரம் பிரம்மா விஷ்னு மகேஸ்வரணின் ஒருங்கினைந்த ரூபமாகவே கருதப்பட்டு வலம் வருகின்றனர்.

ஆண்கள் பெண்கள் என இருபாலரும் திருமணம், குழந்தை வரம் மேலும் வாழ்வில் செழித்தோங்க அரச மரத்தினில் மஞ்சள் கயிறு, தொட்டில், துணிகள் போன்றவைகளை கட்டி வேண்டிக் கொள்கின்றனர். அதற்காண பலனையும் பொருகின்றனர்.
 
அரச மரத்தை சுற்றி வருவது ஏன்?

நாம் அரச மரத்தில் கயிறு, துணிகள் முதலியவற்றை இருக்கமாக கட்டும் போது மர விழுதுகள் மற்றும் கிளைகளில் ஏற்பபடும் காயங்களில் இருந்து வெளியாகும் ஈரபசை காற்றில் கலந்து நறுமணமாக சுவசத்தின் வழியே சென்று கருப்பை கோளாறுகளை நீக்கி மகப்போறு அடைய உதவுகிறது. இதனை ஆங்கிலத்தில் அரோமா தெரப்பி என்று அழைக்கப்படுகிறது. தமிழில் நறுமண சிகிச்சை எனப்படும்.


அரச மரத்தை வலம் வரும்போது வேகமாக நடப்பதோ, அதிக இடைவெளி ஏற்படும் வகையில் அடிகளை அகற்றி வைப்பதோ கூடாது. அடி பிரதக்ஷனம் செய்வது போல மெல்ல நடந்து 7 முறை மரத்தை சுற்றி வலம் வர வேண்டும் . அரச மரத்தைக் அதிகாலை வேளைகளில் வலம் வருவதே நல்லது.

அதிகாலை அரச மரத்தின் அருகில் உற்பத்தியாகும் காற்றில் ஓசோன் கலந்துள்ளதால் பல நோய்களும் குணமாகும். இம்மரங்களில் உண்டாகும் இளம் தென்றலில் கரியமில வாயுவை பிராண வாயுவாக மாற்றுகிறது .

அரச மரத்தின் வேர் பிரமனின் உருவமாகவும் . நடுமரம் விஷ்ணுவின் உருவமாகவும் –மற்றவை சிவனின் உருவம் என்று வேதங்கள் கூறுவதால் இம்மரத்தை வழி படுவதால் பிரம்மா – விஷ்ணு – சிவன் – மூவரையும் வணங்கிய பாக்கியத்தை பெறுவதோடு குழந்தை செல்வம் பெறுவதற்கும் ஒரு வர பிரசாதமாகும் .

அரச மரத்தின் வேறு பெயர்கள்

 சிற்றரசு, பேரரசு, கொடியரசு, பூவரசு இதன் வகைகளாகும். இம்மரத்திற்கு அசுவத்தம், அத்திரு, அத்துகமானி, அச்சுவத்தம், அத்துமானி, அத்திரா, கணவன்,  ஆச்சவரி, ஆராகவரியம், ஆராமரியம், ஆள்வணங்கி, ஆல்வள்ளரி, குஞ்சராசணம்,  சித்திரவேகை, இலணை, சயிக்கர், சரணம், சராசணம் என்று வேறு பெயர்களும் உண்டு.

அரச மரத்தின் மருத்துவ பயன்கள்

மருத்துவ ரீதியாக அரச மரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும் குணம் இருக்கின்றது. அரச இலை, பட்டை, வேர், கனி என எல்லாமே மருத்துவ குணம் உடையவைகள்

அரச இலை
துளிர் இலைகள் வெண்ணையுடன் சேர்த்து புண்களின் வீகத்தினை குறைக்க உதவகின்றன, இலைகள் சிறு சிறு கொப்புளுங்களுக்கும் மலத்தை இளகுவாக்கு வதற்கும் பயன் படுகிறது.

அரச பட்டை

அரச பட்டை பொடி தோல் புண்கள் வீக்கம் முதலியவற்றிற்கு மேற் பூச்சாக பூசப்படுகிறது. பட்டையின் கசாயம் தசைகளை இருகச் செய்கிறது. மேலும் பால்வினை நோய்களில் இருந்து விடுதலை தருகிறது. மேலும் முதிர்ந்த மர பட்டையின் பொடியினை ஒரு மண்டலம் (48 நாட்கள்) பாலுடன் சேர்த்து குடிக்க காமவிருத்தியடைய செய்து விந்துவை பலப்படுத்துகிறது. ஆகவே மரத்தை சுற்றி வருவதோடு மட்டும் மல்லாமல் பட்டையை ஒரு வர பிரசாதமாக பயன்படுத்துவோருக்கு குழந்தை பாக்கியம் நிச்சயமே.

அரச மர கனிகள்

  கனிகள் ஜீரணத்தை ஊக்குவித்து மலமிளக்கியாக பயன்படுகிறது. இம்மரத்தின் பழங்களை நிழலில் உலர வைத்துப் பவுடராக்கி மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து தினசரி ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து தினசரி ஒருவேளை என பதினான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைகள் நீங்குகிறது. 

 அரச பற்றி நம் முன்னோர்கள் கூறி சில பலமொழிகள் 


“அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்”
"அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!"

keywords arasa mara payankal, pengal karuppai kollaru, arasa mara pala mozhikal, arasa mara kanikal palangal pattai ver,  arasa mara maruthuva payangal, aromatherapy in tamil, narumana sikichai, karu undaga, arasa maram sutri valam varuvathu ean? kuzhanthai paakkiyam pera, maga peru paakiyam, aanmai viruthi pera, mruthuvam.