மனையடி சாஸ்திரதின் சிறப்பு - manaiyadi sasthiraththin sirapu - ஔசதம் - OWSHADHAM -->

Monday, June 1, 2015

மனையடி சாஸ்திரதின் சிறப்பு - manaiyadi sasthiraththin sirapu




     மனையடி சாஸ்திரம்இ ஜோதிட சாஸ்திரத்தைப்போல ஒரு கலை ஆகும். அதில் பல உண்மைகள் அடங்கியிருந்தன.

     ஜோதிட சாஸ்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இதற்கு கொடுக்கப்படுதில்லை. ஒரு பெண்ணுக்கும்இ ஆணுக்கும் திருமணம் செய்ய நினைத்தால் முதலில் ஜோதிட சாஸ்திரத்தின் துணையை தேடுகிறார்கள்.

     பெண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தம் இருக்கிறதாஇ மணவாழ்க்கைஇ மாங்கல்ய பலம்இ அவர்கள் சீரும் செல்வத்துடன் வாழ்வார்களாஇ எத்தனை குழந்தைகள் பிறக்கும் என்ற விவரங்களை ஒரு ஜோதிடரிடம் அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

     பெண்ணுக்கும் பையனுக்கும் நல்ல பொருத்தம் இருந்தால் திருமணம் நிச்சயக்கப்படுகிறது. பொருத்தம் இல்லையென்றால் திருமணம் நிச்சயிக்கப்படுவதில்லை.


     ஆனால் வீடுகட்ட நினைப்பவர்கள் மனையடி சாஸ்திரத்தை நாடுவதில்லை. எஞ்சீனியரையோஇ அனுபவம் மிகுந்த மேஸ்திரியையோ நாடிச் செல்வார்கள். வீட்டைக் கட்டுவதைப்பற்றி அவரிடம் தீவிரமாக ஆலோசனை புரிவார்கள்.

     ஒருவர் தேவையான பணத்தை வைத்துக் கொண்டு வீட்டைக் கட்டத் தொடங்குகிறார்இ ஆனால் கட்டிமுடிக்க முடிவதில்லை.

     மற்றொருவர் சொற்பப் பணத்தை வைத்துக் கொண்டு குருட்டுத் தைரியத்தில் வீட்டைக்கட்டத் தொடங்குகிறார்இ அது மிகக் குறுகிய காலத்தில் கட்டப்படுகிறது.

     இந்த நிலையைப் போக்க வீடுகட்ட நினைக்கும்போது மனையடி சாஸ்திரத்தில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் மனையடி சாஸ்திரம் தெரிந்து கொள்ள வேண்டும்.

     ஒருவர் சொந்த வீடு கட்டியதிலிருந்து சொத்துக்கு மேல் சொத்து சேர்த்து லட்சாதிபதி ஆகி விடுகிறார். .மற்றொருவர் சொந்த வீடு கட்டியதிலிருந்து ஒவ்வொரு சொத்தாக விற்று வாடகை வீட்டிற்குக் குடித்தனம் செல்கிறார்.