வெய்யில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள
கோடை காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடல் குளிர்ச்சியாகும். தினமும் குறைந்தபட் சம் 3லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பாட்டில் குளிர்பானங்களில் ஆல்கஹால் கலந்து அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
இதன்மூலம் அதிகளவு சிறுநீர் வெளியேற்றப்பட்டு உடலில் உள்ள நீர்ச் சத்து குறைந்து விடும். பாட்டில் குளிர்பானங்களில் சுத்திகரிக்கப்பட்ட பாஸ்பரிக் அசிட் இருப்பதால் செரிமான முறையில் பாதிப்பு ஏற்படும். ரத்தத்தில் பாஸ்பரஸ் அளவு அதிகரிக்கும். இதனால் சிறுநீ ரகத்தில் கல் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
அதிக குளிர்ச்சியான பானங்களை அருந்துவதால், உடல் உண்மையான குளிர்ச்சியை அடையாது. இதன்மூலம் தோலில் உள்ள ரத்தநாளங்களில் பாதிப்பு ஏற்படுவதோடு வெப்ப இழப்பை ஏற்படுத்தும். எளிதான, சத்தான, கொழுப்பு குறைவான உணவுகளை உண்பது சிறந்தது. முள்ளங்கி, வால் மிளகு, வெங்காயம், பூண்டு, பீட்ரூட், பைனாபிள், திராட்சை மற்றும் மாம்பழம் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.