சேலம் மாம்பழத்தின் மருத்துவ பயன்கள் - salem mambalathu maruthuva payan
மாம்பழம் என்றால் சேலத்து மாம்பழம் தான் தனி ருசி என்பார்கள். அந்த
அளவிற்கு சேலம் மாவட்டத்தில் மாம்பழங்கள் அதிகமாக விளைகிறது. இங்கு
இருந்துதான் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப் பாடுகிறது. மாம்பழ
சீசனில் சேலம் முழுவதும் மாம்பழ வாசனையாகவே இருக்கும்.
மாம்பழத்தின் மருத்துவ பயன்கள்:-
76.0 கிராம் நார்ச்சத்து
0.6 கிராம் தாதுப் பொருள்
0.4 கிராம் கொழுப்பு
0.4 கிராம் புரதம்
0.5 கிராம் மாவுப்பொருள்
17.0 கிராம் சுண்ணாம்புச் சத்து
13 மில்லி கிராம் இரும்புச் சத்து
1.2 மில்லி கிராம் கரோட்டின்
72. கலோரி தையமின்
0.8 மி.கி நியாசின் –
0.8 மி.கி ரைபோஃபிளேவின்
0.08 மி.கி வைட்டமின் சி.
மனசோர்வை நீக்கும்,
ஆண்மையை அதிகரிக்கும்
உடல் வன்மையை அதிகரிக்கும்
பசியை தூண்டும்.
மாம்பழத் துண்டுகளை சாப்பிட்டு பால் அருந்தினால் உடல் பலமடைவதுடன் செரிமான சக்தியும் கூடும்.
மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து மிகுந்திருப்பதால், அது உயர்
ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது
வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ,மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்
மாத விலக்கு சீராக இல்லாத பெண்கள் மாம்பழம் கிடைக்கும் காலங்களில் அதைபாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கு சீராகும்
மாம்பழம் செக்ஸ் ஹார்மோன்களை சீராக வைத்து, ஒருவரது பாலுணர்வை தூண்டும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் 'ஈ' சத்துதான் இந்த ஜாலவித்தையை புரிகிறதாம்.
இரவு உணவுக்குப்பின் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கு சீராகும். இரவு உணவுக்குப்பின் மாம்பழச் சாறு சாப்பிட்டு வந்தால் முகம் பளபளக்கும். மலட்டுத் தன்மையைப் போக்கி ஆண்மையை அதிகரிக்கும்.
உணவுகளுக்குப் பதிலாக மாம்பழத் துண்டுகளை சாப்பிட அதிலிருக்கும் குளுடாமின் அமிலம்,கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.
மாம்பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
வெறும்வயிற்றில் சாப்பிடக் கூடாது. உணவு உண்டபின் 20 நிமிடம் கழித்துசாப்பிடுவது நல்லது.