ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் - ஔசதம் - ஔசதம் - OWSHADHAM -->

Friday, February 27, 2015

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் - ஔசதம்

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்
ஆயுள் நீடிக்க மூலிைக மருத்துவம் ஔசதம் owshadham
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்

                       இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய மூன்றிலும் ஒரே மூலிகைகளே வேறு வேறு பெயர்களில்
அமைக்கப்படுகின்றது.
 
                      சுக்கு,மிளகு,திப்பிலி,மஞ்சள்,புளி,துளசி, பெருங்காயம் ஆடாதோடை, பூண்டு, எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிைககள்.

1.சுக்கு,மிளகு,திப்பிலி

இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல்,
ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு
அருந்தினால் உடனே குணம் கிடைக்கும். மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது
மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரேவண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி

தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ
ஏற்படாது. வயதானவர்கள் பசியிலை என்று சொல்ல மாட்டார்கள் குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.
 
3.புளி
 
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும்
சி, டார்டாரிக் அமிலம், கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக்
அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியைவ தாக்கினால் மிளகு,
பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள் சாம்பார்
தினமும் இடம் பெறட்டும்.
 
4.துளசி
 
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி
இன்மை, ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை
உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன்,  இஞ்சி
முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள
குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக்
கஷாயம் கொடுத்தால் போதும். ஆங்கில மருத்துவத்தில் தரப்படும்
ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்
 
இவற்றில் புற்று நோய் குணமாக்கும் போரான் என்ற உப்பு
இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாட்களாவது மூலிகை
நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி
 
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம்
அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி
வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும். காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடேன உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.
 


7.சோற்றுக் கற்றாழை
 
சோற்றுக் கற்றாழ இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி, மலட்டுத்
தன்மை, கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள
பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு

உணவில் சேரும்சோம்பு கண் கோளாறுகைளத் தடுக்கிறது சோம்புக் கஷாயம்
மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடேன
மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய், பூசணிக்காய்

இவை சிறுநீரகக் கோளாறுகைள குணமாக்குகிறது. நீரிழிவு நோய்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
 
10.விளாம்பழம்
 
வயிற்றுப் பொருமல், தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு
 
இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளை பாலில் கலந்து சாப்பிடவும். புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி
 
கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும். குடிப்பழக்கமும், மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லிையயும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும். கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.
 
சர்க்கைர நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு
சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடாச் சாறை
தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.
கிராம்பு, ஏலக்காய், அதிமதுரம், வசாகா, குப்பைமேனி போன்றவையும் மூலிைககள்தான். ஆயுர்வேத மருத்துவர்கள் மூலம் இந்த மூலிகைகளைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

arokkiya unavu, satthana unavu, noi illa valvu, sukku in english, milaku in english, thippili in english, inchi in english, puli in english, thulasi in english, perikai in english, nannari, nanari in english, sotrukatralai, sompu in english, suraikaai, poosanikaai, velampalam, velam plam, vailam pzham, velam pazham, karisalankani keerai, kilanelli, keelanelli,