கிணற்று பாசான், வெட்டுக்காயப் பூண்டு, தண்ணீர் பூண்டு, தாத்தா தாத்தா பூண்டு - ஔசதம் - ஔசதம் - OWSHADHAM -->

Monday, December 29, 2014

கிணற்று பாசான், வெட்டுக்காயப் பூண்டு, தண்ணீர் பூண்டு, தாத்தா தாத்தா பூண்டு - ஔசதம்

வெட்டுக்காய பூண்டு மருத்துவ பயன்கள்

 vettu kaya poondu maruthuva payangal in tamil



கிணற்று பாசான், வெட்டுக்காயப் பூண்டு, தாத்தா தாத்தா பூண்டு, இதனை தண்ணீர் பூண்டு என்று பல பெயர்களல் அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் - Tridax procumbens

இது நீர் ஓட்டம் உள்ள செம்மண் நிலத்தில் தனாகவே வளரும் செடி. இதன் இலை பகுதி சற்று சொறு சொறுப்பாக இருக்கும். இலையை பரித்து கையால் கசக்கினால் அதிக படியானவ பச்சை நிர நீர் வரும் இதை அடிபட்ட புண் மீது அப்படியே தடவ காயத்தில் இருந்து வெளிவரும் இரத்தம் குறைந்து விரைவில் புண் ஆறிவிடும்.

கொப்புளங்கள், தீ கயங்கள் மீதும் இதன் சாற்றை தடவலாம். இலையை பரிக்கும் முன் கையை சுத்தமாக கழுவவும். விவசாயம் செய்பவர்கள் ம்ற்றும் கல் உடைப்பவர்கள் இன்றும் இதை அருமருந்தாக பயன் படுத்துகின்றனர்.

இது புண்ணாற்றும், குருதியடக்கி, கப நிவாரண,மூச்சுக்குழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோர்ப்பு, வயிற்றுப்போக்கு, பேதி முதலியவை குணமாகும்.

கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும், குப்பைமேனி இலைச்சாறும் கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும். மேலும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்