பெண்கள் நட்சத்திர ஜோதிட பலன்கள் - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, June 25, 2015

பெண்கள் நட்சத்திர ஜோதிட பலன்கள்

பெண்கள் பிறந்த நட்சத்திர பலன்கள்


அசுவனி

"அழகுநற் பார்வைபுத்தி அகமகிழ் பெருத்தஉந்திக்
கழருவா ளினியவாக்குக் காதலாள் சனசகாயம்
குழவியர்த் தோடந்தேவ குருவிச வாசமுள்ளாள்
சழக்குள மதத்தாள்வாசி சனித்தவள் பலநிதாமே"

                அசுவனி  நட்சத்திரத்தில் அவதரித்தால் அழகுள்ளவள் நல்ல பார்வை மனசந்தோஷம் சற்று பெருத்தவயறு பிரியமான வாக்கு சனசகாயம் விசுவாசம் நற்பத்தி தேவதா குருபக்தி அற்ப சந்தானதோஷம் பொருளகங்காரம் உள்ளவளாம்.
பரணி
"பரணியிலுதித்த மாதுபலவித சருக்கு வெண்ணம்
அரணுள மேனிதன்னுள்  ளமர்ந்திடுஞ் சுகத்தாள்முன்னம்
அரியவர் கூட்ட முள்ளா ளழுக்குளறுயி லிலாசை
தரித்திரதர்ப் புகழ்ச்சி தந்தைதாய்க் கினியளாமே "

                 பரணி நட்சத்திரத்தில் ஜனனமானவளுக்குப் பல விதமான கோரிக்கைகளோடு கூடியவெண்ணம் அழகுள்ள சரீரம் தனக்குள் சுகம் பெண்கள் கூட்டமுள்ளாள் அழுக்கான ஆடையைத்தரிப்பாள் சற்று தரித்திரம் தன்னைத்தான் புகழ்தல் தாய் தந்தைக்கு பிரியமானவள்.

கார்த்திகை

"கார்த்திகை நாளில் வந்தகன்னியின் குணத்தைக்கேளீர்
கீர்த்தியாள் சனவிரோதி கிருபணி வலிவதீனம்
சீர்த்தியும் மில்லள்கோபி சிடுசிடென் றிடுவாள்சண்டை
பார்த்திபன் மனைவியாம் பயநிலை பகருவீரே"

                 கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண் சனவிரோதி கீர்த்தியுள்ளாள் வலிவு குறைந்த சர்ரீரம் கொடுப்பதிலும் செலவிலும் ரெம்பவும் ஹினமானவள் பரிசுத்தமில்லாள் முன்கோபம் சிடுசிடுப்புடன் சண்டையிடுவாள் பந்துக்களிடம் அன்பில்லாள் புருஷன்அரசனாயிருப்பினும் இவளுக்கு சுகமில்லை.

ரோகிணி

"பதிதனக் கினியாள்சுத்தம் பக்ருவோம் பெருத்ததேகம்
சதிருடன் பெற்றோர்வாஞ்சை சந்ததி விருத்தியாயுள்
விதியுள குலத்தாள்கீர்த்தி விழிமயி ரழகிபின்னால்
 சதியுள சஞ்சலங்கள் சாருமே ரோகணிநாள்."

               ரோகிணி நட்சத்திரத்தில் உதித்த பெண் புருசனுக்குப் பிரியம் சுத்தம் சற்று பெருத்ததேகம் தந்தை தாயருக்கு ஆசையுள்ளவள் புத்திர விருத்தி தீர்க்காயுள் குலவர்த்தனீ மானவதி செல்வமுள்ளவள் நல்ல ரூபம் விழியும் மயிலும் அழகுடையவள் பின்னால் சற்று சஞ்சல தோஷமும் உள்ளாள்.
மிருகசீரஷம்

"மானிநல் லுருவம்வாக்கு மதுரமா பரணசத்திரம்
தானியம் பிள்ளைப்பேறும் தருமநற்ப் பொருள்பால்விர்த்தி
ஈனமில் குலமும்சீலம் மிசைந்திடும் யோகம்றன்பால்
நானிலத் திங்க நாளின் நங்கையாள் குணமிதாமே"

               மிருகசீரஷ நட்சத்திரத்தில் பிறந்த பெண் மானம் நல்ல ரூபம் பிரியமாகி மதுரமான வார்த்தை வஸ்திராபரணம் சாஸ்திர ஞானம் பலபதங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுவாள் பசு தான்னியம் பொருள் சந்தன விர்த்தி தருமகுணம் நல்ல வம்சம் ஆசாரம் தன்னால் பிறந்த இடத்திலும் பதிக்கும் யோகம் உண்டாம்.

திருவாதிரை

"பித்தசீ தளமாந்தேகம் பின்சுக முடையாள்கி லேசி
சித்தசஞ் சலமுங்கெட்ட செய்கைகள் பலவேயுள்ளாள்
மெத்தநற் பணியேசெய்வாள் மேன்மையு மு றந்தநெஞ்சம்
நித்தமும் சமரில்லூக்கம் நிலைக்குமா திரையின்நாளே"

              திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பித்த சீதள சம்பந்தமான சரீரம் முன் கஷ்டமமும் பின்னால் சுகம் மனசஞ்சால்ம் சற்றுவிதனம் தகாதநடபடிக்கை காரியங்களை வெகுலேசாக செய்குவாள். அபிமானமுள்ளாள் உரத்த நெஞ்சம் சதாகலகம் செய்வதில் விருப்பம் உடையவள்.
புனர்பூசம்

"களிப்புளாள் பிறர்சொற்கேட்பாள் கற்பிநள் பொறுமைதான
மளித்திடும் பாக்கியம்பக்தி மனுபவித் திடுநன்நனமை
நளிருடன் புண்ணியங்கள் நங்கையுஞ் செய்வாள் நித்தம்
ஒளியுளா ளதிதிநாளி லுதித்தவள் சரிதமிதே"

               புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அபிமானம் பிறர் சொல்கேட்டல் பதிவிரதை, தானதர்மம் செய்யும் பாக்கியம் நல்ல புத்தி சுகபோகி புண்ணியம் செய்யும் ஆவல் எவருக்கும் பிடித்தமானவளாள்.

பூசம்

"பணிகளில் விருப்பம்தேவ பதிவிசு வாசம்மற்றோர்
அணிகலம் பூண்டதேகம் மழகுளா ளின்பவாக்கு
கணித்நூல் சுரத்ங்கற்றாள் காசினி மகவுமுள்ளாள்
துணிவுள தருமசிந்தை தோகையர்ப் பூசநாளே"

              பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் சோம்பலின்றி எல்லா வேலைகளையும் செய்ய ஆசை தெய்வபக்தி பதிவிசுவாசம் எப்பவும் ஆபரணம் அணிந்த அழகுடைய சரீரம் இன்பமான வார்த்தை கணக்கு விவகாரங்கள் தெரிந்தவள் காமநூள் படித்தவள் சந்தான விருத்தி தைரியத்துடன் தர்மம் செய்யும் புத்தியுடையவள்.

ஆயில்லியம்

"பிரியமுங் கலகம்பொய்யும் பிதற்றிடுங் கடினவாக்கு
அரவினி லுதித்தமங்கைக் கதிகமாம் விதனமெய்யும்
நெறியிலாள் புதல்வான நீண்டதோர் கோபங்கொள்வாள்
பரிசன ருறவுகொள்ளள் பாவமுன் கன்மதோஷம்"

               ஆயில்லியம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் கலகப்பிரியை பொய்யுரைப்பாள் கடூரமான வாக்கு அனேகவிதமான விதனம் குரூரத்தோடு பாபகாரியஞ் செய்பவள் பந்துஜன விரோதம் நீடித்த கோபமுள்ளவள் தேகவிளைப்பு பிணி பீடையும் முன்செய்தவினையால் புத்திரதோஷ முடையவளாம்.

மகம்

"உத்தமி சாத்ரங்கற்றா ளுலகங்கொண் டாடும்மெய்யாள்
பத்தியாங் குருக்கள்தேவர் பதியுடன் போகபாக்கியம்
நித்தமு மனுபவிப்பாள் நிலவுபோல் பொருளாள்புண்ணியம்
மெத்தவுஞ் செய்துதேக மிளைத்தவள் மகத்திநளே"

              மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் நன்னடைக்கையுடையவள் சாத்திரகேள்வி உலகம் கொண்டாடும் மெய்யாள் பெரியோரிடத்தும் தேவதைகளிடத்தும் கண்வரிடத்தும் பக்திவிசுவாசம் உள்ளவள் ராஜயோக பாக்கியத்தை அனுபவிப்பாள் சந்திரனை போல சில காலம் குறையவும் விர்த்தியாகவும் உள்ளபொருளாள் புண்ணிய காரியங்கள் செய்வதால் சற்று இளைத்த சரீரம் உள்ளவளாம்.

பூரம்

"சந்திர காந்திதேகஞ் செய்நன்றி மறவாள்காமீ
தந்திர வசனம்புத்தித் தனயரும் மிகவேயுண்டாம்
வந்துதோர் குடும்பவீனம் வளர்ந்திடும் பாக்கியங்கோபி
புந்தியும் மிகவேயுள்ளாள் பூரத்தி லுதித்தாளுக்கே"

               பூரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் சந்திரனை போல் குளிர்ந்து ஒளியுள்ள சரீரம் உபகாரம் மறவாமை காமத்திலதிக ஆசை பாக்கிய விர்த்தி தந்திரமாக உரைக்கும் புத்தி புத்திர சம்பத்துள்ளாள் பிறந்த குடும்பம் சற்றுநசித்தல் முற்கோபம் பெருத்த வயறு உள்ளவள்

உத்திரம்

"உத்திரந் தனிலுதித்தா ளுயர்குணம் பிரியவாக்கு
சத்திய முரைக்கும்நேர்மை சற்குணந் தருமசசிந்தனை
நித்தமுங் குடும்பம்த்ன்னில் நிரணய நோக்குமெய்யும்
மெத்தென உயர்ந்ததேகி மேன்மையாள் போகியாமே"

             உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் நல்லோர் புகழும்படியாகிய நற்குணங்கள் நயமானவாக்கு சத்தியம் பொறுமை சம்சாரவிசியத்தில் தகுமானபார்வை உயர்ந்ததேகம் சுகீ கெளரவம் தருமபுத்தி பர்த்தாவுக்கு இவளாற் செல்வம் விர்த்தியாகும்.
அஸ்தம்

"பொறுமையும் முகங்கண்காது பொருத்தமா மழகுகற்பு
அருமைசேர் சுகசரீரம் மாசாரம் தன்முமுள்ளாள்
வறுமையுஞ் சிலநாள்கோபி வைராக்கிய திடமாம் புத்தி 
இருமையாந் தன்காரியத்தி லிட்டமாமத்தாளே"

           அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் பொறுமை கை கண் காது இவைகள் பொருதமான அழகு பதிவிரதை சுகசரீரம் ஆசாரம் தன்முள்ளவள் சில காலம் தரித்திரம் அனுபவிப்பாள் திடமான வைராக்கிய புத்தி தன் காரியதிலேயே நோக்கமுள்ளவளாம்.

சித்திரை

"சித்திரை தோய்வுநாளில் சுகமில்லாள்வி
சித்திரா பரண்ரூபவம் சிட்டருந் தேவபக்தி 
நித்திரை பொருளுமற்பம் நிந்தைசொல் லதிகவாசை
மெத்தநன் வளர்நாளாகில் மேன்மையாய் மகிழவாழ்வாள்"

            சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண் சுகமில்லாதவள் விசித்திராபரணமும் ரூபமுள்ளாள் தேய்பிறையில் சதுர்த்தசி திதியோடு சித்திரை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் பிறந்தவள் விஷகன்னிகை என்று சொல்லப்படும். மேல்கண்ட நாள் வளர்பிறையானால் தரிதிரம் தேவதாபக்தி சீலம் அற்பநித்திரை பிறரைப் பரிகாசஞ்செய்தல் சனபிரீதி உள்ளவள்.

சுவாதீ

"புத்திரர் நல்லபுத்தி பொருந்திய கீர்த்திசினேகம்
சத்திய வாக்குச்செல்வம் சாதுநல் லுறவுரூபம்
பத்தியாள் பதிக்குயின்பம் பகர்ந்திடும் பணிகள்மெள்ள
உத்தமீசோதிநாளி லுத்தவ னின்னவாறே"

                சுவாதீ நட்சத்திரத்தில் பிறந்த பெண் சந்தானவிர்த்தி யுக்தியாக சொல்லும் புத்தி சத்தியமுறைப்பாள் தனமுளாள் கீர்த்தி பெரியோர்கள் சினேகம் பொறுமை அழகிய பதிபத்தி இன்பமானவள்.
விசாகம்

"ஒளியுள யழகுமேனி உயர்விரதந் தருமசிந்தை
களிப்புடன் தீர்த்தமேகக் கன்னியும் விருப்பமுள்ளாள்
துளிருள மரத்தைப்போல துவளிலா தனதான்னியங்கள்
நளிருடன் பெற்று வாழ்வாள் நங்கைலை யாசிநாளே"

              விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் அழகு பொருந்திய ஒளிவீசும் சரீரம் விருததிகளிலும் த்ருமத்திலும் புத்தி புண்ணிய தீர்த்த யாத்திரை விருப்பம் அழிவில்லாது அமைந்த செல்வமுள்ளவளாம்.



அனுஷம்

"வேந்தனென் றொக்குஞ்செல்வம் வேழமாம் நடையும்புத்தி 
சாந்தமும் வாஞ்சைநல்ல சாத்திர கேள்வி மேன்மை
காந்தையு மழகிகற்பு கணவனின் சுகமில்லாதாள்
போந்தையி லுதித்தநல்லாள் புசிப்பளே இறைச்சியென்றார்"

                அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் அரசனுக்கு சமமான ஐஸ்வரியம் நல்ல புத்தியானையைப் போல் நடை பொறுமை ஜனங்களிடத்து ஆசை தருமநூல் கேள்வி பெருமை அழகிய கற்புள்ளாள் பதிபத்தி கணவன் சுகமல்பம் மது மாமிசங்களை புசிக்கும் குணமுள்ளவளாம்.

 கேட்டை

"நன்விநய குரோதசாத்திர நம்பிக்கை சற்றுமில்லாள்
பன்மிசை புத்திரபாக்கியம் பலித்துமுன் பொருளுமுள்ளாள்
கன்னியின் வாக்குநல்லோர் களித்திட புகல்வள்கோபீ
பின்னிடை துக்கமுள்ளாள் பிறந்த்து கேட்டைநாளே"

              கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண் நல்வணக்கம் மனதில் குரோதம் சாத்திரங்களில் நம்பிக்கை சற்றும்மில்லாதவள் புத்திரவதீ முன்சம்பத்துள்ளாள் எவரும் கேட்கத்தகுந்த வார்த்தை யுரைப்பாள் முங்கோபம் பின்னிடை சற்று தரித்திரம்முள்ளவளாம்.
மூலம்

"சாத்திர திறமையற்பச் செளக்கியங் கைம்பெண்ரோகி
பாத்திரம் நீசபுத்தி பைங்கிளி பிறரைச்சேர்வாள்
நேத்திர மழகுமானி நிதியுள்ளாள் தரித்திரயோகம்
கோத்திரத் திவட்குயீனம் கோதிலாள் மூலத்தாளே"

               மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் சாத்திரகேள்வி அற்பசெளக்கியம் வைதவியம் வியாதிக்குப்பாத்திரமானவள் நீசபுத்தி பாஜனபோகிகுலவீனம் அழகிய மானமுள்ளாள் பொருளிருந்தும் சற்றும் தரிதிர யோகமுடையவள்.

பூராடம்

"புண்ணிய கருமத்தாசைப் புரிகுவள் பலகாரியங்கள்
நண்ணிய குலத்தில்கீர்த்தி நவிலுவள் சத்தியவாக்கு
எண்ணிய படியேசெய்வா ளெதிரிலா வலுத்ததேகம்
மண்ணினிலுடையகுலத்தாள் மனதில் தருமவழ்வே"

              பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் புண்ணியமான காரியங்கள் செய்வதில் விருப்பம் வீட்டில் எல்ல வேலைகளையும் செய்வாள் குலத்திற்கு நன்மை சத்தியமுரைப்பாள் தன்னிஷ்டப்படி செய்யத் த்குந்த வலிவுள்ள சரீரம் அழகிய கண் தர்ம புத்தியுள்ளவளாம்.

உத்திராடம்

"உறவின ருள்ளவீடு உயர்குல குடும்பமேன்மை
பறவிய செல்வயோகம் பதிக்குற வதிகவாஞ்சை
அறவர்கள் பத்திமிக்க அன்புளாள் கற்பின்மங்கை
கறவைகள் பாக்கியமுண்டு கடைக்குலத் துதித்தாளுக்கே"

             உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் பந்துமித்திர ஜனங்கள் உள்ளவீடு உயர்ந்தகுலம் சம்சாரத்தில் முதன்மையானவள் தன்பாக்கிய யோகம் பதிக்கிஷ்டப்படி நடப்பாள்  பொரியோர்கள் பக்தி விசுவாசம் கற்பின்நிலை பால்பாக்கியமுள்ளாள்.

திருவோணம்

"வடிவுடை மயிலாம்ராச வம்சம்போல் ரூபமுள்ளாள்
கடிமணம் புத்திரவிருத்தி கலக்கம தில்லாநெஞ்சம்
குடிபுகுந் திடமுந்நன்று கோபமு மில்லாநல்லாள்
படியினில் தர்மநீதி பகருவாள் ஓணநாளே"

           திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் இராசவம்சத்துடைய அழகியரூபம் கலியாணமான சீக்கிரத்திலே புத்திரபாக்கிய முள்ளாள் சுத்தமான நெஞ்சம் புகுந்தவழி நல்லது கோபமில்லாள் தர்ம நீதியை எடுத்துரைப்பாள் எல்லார்க்கும் நல்லவளாம்.

அவிட்டம்

"அருமைசேர் பணிகளடை யணிவளே பறவைநாளில்
தருமமுஞ் சத்தியவாக்கு தனதன்போல் பொறுமையுள்ளாள்
பெருமையும் புராணகேள்வி பிரியமாம் சனங்கள்றன்பால்
பெருமிதத் துடனேவழ்வாள் பெண்மணி யுலகத்துள்ளே"

             அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் நல்ல வஸ்திராப ரணங்களையணிவாள் தர்மம் சத்தியவாக்கு குபேரனைப்போல் கெளரவம் பெருமை புராண புண்ணிய சரித்திரம் கேட்கபிரிய முள்ளவளாம்,
சதயம்

"உதித்தது சதயமாகி லுத்தமீ பெருமைதிமாகி
மதித்துளர் திருமகள்போல் மங்கையின் ரூபம்வாசை
பதித்தநல் தெய்வபக்தி பத்தாவுக் கினியபுத்தி
துதித்திடுங் குணத்தாள்சற்று தோஷமாம் பாவகோபம்"

           சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் பொறுமை த்ர்மகுணம் லட்சுமியைப் போல அழகியரூபம் சனங்களிடத்து விசுவாசம் மரியாதை தேவதாபூசை பொரியோர் வணக்கம் பத்தாவுக்குப்பிரியம் கருணையும் முன்செய்த பாபகர்ம அனுபவம் உள்ளவளாம்.

பூரட்டாதி

"தானிய மாடு மக்கள் தருமமுஞ் செய்வாள் சாது
மேனியும் பெருத்த உந்திமேன்மையாம் சாத்திர கேள்வி
வானில தெய்வ பக்தி வருத்து போக்குற வோரில்லம்
மானினி புரட்டை நாளில் மானிலத் துதித வாறே"

         பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் தான்னியம் மாடு மக்கள் தருமம் பொறுமை பெருத்த வயறு சாத்திர விசாரக்கேள்வி செல்வம் நிறைந்தும் எப்பொழுதும் பந்து சனங்கள் வரத்து போக்கு உள்ளவீடு தெய்வபக்தி நிறைந்தவள்.

உத்திரட்டாதி

"உத்திரட்டாதி தன்னி னுலகினி லுதிதாட் பாக்கியம்
மெத்தவே தரும முண்டு மேதினி புகழச் செய்வாள்
பத்தாவுக் கினியாள் ஞானி பகருவள் சத்தியவாக்கு
புத்திரவிருத்தியுள்ளாள் பொறுமையாம் நற்குலத்தாள்"

         உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் பாகியமுள்ளாள் பூமியில் கொண்டாடும் படியான தருமம் செய்வாள் புருஷனுடன் பிரியாதிருக்கும் பிரியம் பொறுமை பெரியோர் புத்தியினாலுண்டான ஞானம் கர்வமில்லாள் சத்தியம் தவறாள் புத்திர விர்த்தியுடையவள் நல்ல குலம்.

ரேவதி

"வாஞ்சையும் விரத முள்ளாள் வளர்பசு பாக்கியங்கள்
காஞ்சனா புரணம் பூண்ட கற்பினாள் பதிக்கு நல்லாள்
வாஞ்சினி யழகி பெற்றோர் வளர்குடி புகுந்தார்க்கின்பம்
தீஞ்சவை யளிப்பாள் தோணி தினமதி லுத்தாள் தானே"

         ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் சனங்கள் மேலாசை விரதங்கள் செய்ய விருப்பம் பால் பாக்கியம் தங்கா பரணங்கள் தரித்தவள் பதிவிரதை எல்லார்க்கும் நல்லவள் பெற்றோர்க்கும் பெண்கொண்டவருக்கும் ஆசையும் கியாதியும் தரக் கூடியவள் தித்திப்புள்ள பதார்தங்களுடன் அன்னமிடுவாள்.



இத்தகவல் கொலும்பு ஜாதக புத்தகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஓர் பொது பலன்கள் மட்டுமே, அவரவர் பிறந்த கிழமை, நேரம் மற்றும் நட்சத்திரங்களை பொருத்தே சரியான பலன் தெரிந்து கொள்ள முடியும் என்பதை மனதில் நினைவு கொள்க.

pengal jathagam, pengal jadhagam, pengal jothidam, pengal jodhidam, pirantha kizhamai palan, kama pengal jadhagam, kama pengalin jadhagam, kama pengalin jothidam, pirantha naal palangal, nalla pengal jathagam kantariya, pen kuzhanthai pirakka vendiya natkal, penkuzhanthai, kudumpa pengal jathagam, athirsta pengal jathagam, ketta pengal jathagam, kama unar vulla pengal jathagam. lucky pengal jathagam, lucky girls jothidam.