இண்டு, இண்டு முள் - Indu maruthuva payan. - ஔசதம் - OWSHADHAM -->

Saturday, October 24, 2015

இண்டு, இண்டு முள் - Indu maruthuva payan.

இண்டு மருத்துவ பயன்கள்

இண்டு, இண்டு முள்

 மருத்துவ பயனுடைய பகுதிகள்


வேர், இலை, தண்டு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இண்டு மூலிகை குணப்படுத்தும் மூலிகை


கோழையகற்றுதல், நாடி நடையையும், உடல் வெப்பத்தையும் அதிகரித்தல் ஆகிய குணங்களை உடையது.

ஈளை, இருமல்

இண்டுத் தண்டை துண்டாக நறுக்கி ஒரு புறம் வாயினால் ஊத மறுபுறம் சாறு வரும். அவ்வாறு எடுத்த சாறு 15 மி.லி.யில் திப்பிலியின் பொடி, பொரித்த வெங்காரம் வகைக்கு 1 கிராம் சேர்த்துக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க ஈளை, இருமல் குணமாகும். மேற்கண்ட மருந்தை 1 தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சளி, மாந்தம் ஆகியவை தீரும்.

இரைப்பிருமல் தீர

இண்டங்கொடிச் சமுலம், தூதுவேளை, கண்டங்கத்திரி வகைக்கு 1 பிடி திப்பிலி, பூண்டு வகைக்கு 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி காலை, மாலை 100 மி.லி. வீதம் கொடுத்து வர இரைப்பிருமல் தீரும். குழந்தைகளுக்கு 10 மி.லி. ஆகக் கொடுக்கலாம்.
இண்டு வேர், தூதுவேளை வேர் வகைக்கு 2 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலி மாலை சாப்பிட இரைப்பிருமல் தீரும்.

இருமல்

இண்டம் இலை, சங்கிலை, தூதுவேளையிலை, திப்பிலி, சுக்கு வகைக்கு 20 கிராம் 1 லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை, மாலை சாப்பிட இருமல் தீரும்.


indu mull mooligai, indu maruthuva payan, indumull sedi, indu mooligai, irumal, iraippu irumal, mooligai maruthvam in tamil, elai, eelai, ylai, mooligai ilai, mulihai, muleegai, mooleegai, mooligai ilaikal. mooligai ilai eppadi payan paduthuvathu.