அவுரி, நீலி மூலிகை மருத்துவ பயன்-avuri neeli mooligai maruthuva payan
அவுரி, நீலி மூலிகை மருத்துவ பயன்
|
அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும் போது கருப்பு நிறமாகவும் இருக்கும்.
அவுரியின் இலைகளிலும் காய்களிலும் ‘Sennocide’ மூலப்பொருள் அடங்கியுள்ளது. இது இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை விளை நிலங்களில், நெல் அறுவடைக்குப் பின் அவுரி பயிரிட்டு, தண்ணீர் வந்து உழும்போது அவுரியையும் சேர்த்து உழுவர். அது ஒரு சிறந்த பசுந்தாள் உரமாகவும், 18 வகை நஞ்சை நீக்கும் குணமுடையது. ஆதலால் அது நிலத்தில் இருக்கும் நஞ்சை நீக்கிவிடும். அதில் விளையும் உணவை உண்ணும் மக்களும் ஆரோக்கியமாக இருந்தனர்.
இப்போது அவுரி நெல்லை விட மதிப்பு வாய்ந்த தாவரமாகி விட்டது. நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும் மூலிகை வகைகளில் அவுரிக்கு பெரும் பங்கு இருக்கிறது. இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
பண்டைய நாட்களில் இருந்தே நமது கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கும தாங்களாகவே நெய்த பருத்தி துணிகளுக்கும அவுரியைப் பயன்படுத்தி சாயம் தோய்த்தனர். அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப் பட்டன. நமது நீலச் சாயத்துணி உலகப்பிரசித்தி பெற்றது. நமது பருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப் பட்டே ஆங்கிலேயர் இங்கே வந்ததாக கூறுவார்கள்.
அவுரி என்ற நீலி - யின் வரலாறு
பல நூற்றாண்டுகளாக, இந்தியாவிற்கே உரிய நீலச் சாயப்பொருளான இண்டிகோவைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்ததற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால், 1750 களில் இங்கிலாந்து ஆலைகளில் டன் கணக்கில் உற்பத்தியான பருத்தித் துணிகளுக்காக இண்டிகோ சாயம் அதிக அளவில் தேவைப்பட்டது.அதுவரையில் இண்டிகோ வழங்கி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள், அரசியல் காரணங்களால் தனது ஏற்றுமதியைக் குறைத்துக் கொண்ட பின், இந்தியாவில் விளைவிப்பது அவசியமானது.
உணவுப் பயிருக்குப் பதிலாக இண்டிகோவைப் பயிர் செய்யப் பலவந்தமாக வற்புறுத்தி, வங்காள விவசாயிகளின் மேல் பல கொடுமைகளை இழைத்துத் தங்கள் சொந்த லாபத்துக்காக விளைச்சலைப் பெருக்கிக்கொண்டனர். 19 ஆம் நூற்றாண்டில், வங்காளம் உலகிலேயே மிகப்பெரிய இண்டிகோ உற்பத்தியாளர் என்ற அளவுக்கு இந்தப் பயிர் வளர்க்கப்பட்டது.
வங்காளத்தில் ஃபரித்பூரின் நீதிபதியான ஆங்கிலேயர் இ.டி.லதூர், 1848 இல் இவ்வாறு கூறினார்: "இங்கிலாந்தில் வந்திறங்கும் ஒவ்வொரு இண்டிகோ பெட்டியின் மேலும், மனித இரத்தக் கறை படிந்திருக்கிறது. நீதிபதி என்ற தகுதியில் என்னிடம் அனுப்பப்படும் பல விவசாயிகளின் உடல்களில் ஈட்டிகள் பாய்ச்சப்பட்டிருக்கின்றன; தோட்ட முதலாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு இண்டிகோ வர்த்தகத்தை மேற்கொள்வது, ரத்தம் சிந்த வைக்கும் கொடூரமான முறை நிலைமை மிகவும் மோசமானதும் 1868 ஆம் ஆண்டு இண்டிகோ கலவரங்கள் வெடித்தன.
அதே சமயம், 1880 இல், இரசாயன நீலச்சாயம் உற்பத்தி செய்யும் முறை கண்டறியப்பட்ட பிறகு, இண்டிகோவின் தேவை சரிந்தது; நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரங்களும் கூடவே சரிந்தன. 1895 - 96 இல் வங்காளத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிராகிய இண்டிகோ, 1905-06 இல் 5 லட்சம் ஏக்கராகவும் பின்னர் மேலும் சுருங்கியது. பல இண்டிகோ தோட்டத் தொழிலாளிகள் வறுமையில் வாடி மடிந்தனர்.
மருத்துவக் குணங்கள்:
" எல்லா விடங்களுக்கு மேற்ற முறிப்பாகும்
பொல்லாச் சுரமூர்ச்சை பொங்குவெட்டை – நில்லாப்
பவுரிதருங் குன்மமுதற் பன்னோ யொழியும்
அவுரிதரும் வேருக் கறி " – குணபாடம் பாடல் 518
அவுரி இலைகள் சாயம் தருவது மட்டுமின்றி, மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது. மலச்சிக்கலை நீக்கும். இயற்கையாக கிடைக்கும் மிகச் சிறந்த மலமிளக்கியாகும். இதன் இலை 18 வகை விஷங்களை நீக்கும் வன்மை பெற்றது. காமாலை, சீதளம், கீல்வாதம் இவைகளைப் போக்கும். உடல் பொன்னிறம் பெறும்.
அவுரி, நீலி மூலிகை மருத்துவ பயன்:-
1. அவுரி வேர் பட்டையை கைபிடியளவு எடுத்து, பத்து மிளகு சேர்த்து
நான்கு டம்ளர் நீரில் ஒரு டம்ளராக க் காய்ச்சி தினம் இரு வேளை பருகி வர,
காணாக்கடி, ஒவ்வாமை, தோல் நோய்கள் சில விடங்கள் ஆகியவை தீரும்.
2. இதன் இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட நிச்சயமாக மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள் தீரும். தினம் ஒரு வேளையாக மூன்று நாள் சாப்பிடவேண்டும்.
.
3. இதன் இலையை அரைத்து தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும். இதன் இலையை அரைத்து விளக்கெண்ணெயுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவ மலம் வெளியாகும். இது ஒரு பாதுகாப்பான வைத்தியம் எனப்படுகிறது.
4. அவுரி இலை சாறு பல விஷங்களை நீக்கும். சர்ப்ப விஷத்துக்குக் கூட தரலாம். அவுரி வேரை நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒரு வேளை என எட்டு நாள் தர சிலந்தி எலி முதலியவையின் விஷம் நீங்கும் எனப்படுகிறது.
இதில் நெல்லிக்காய் அளவு என்று சொல்வது பிரமாணம். பசும் பாலில் கலந்து என்பது அனுபானம். சித்த மருந்துகளில் இவை இரண்டும் முக்கியம். மேலும் சுத்தி செய்வது மிக முக்கியம். அத்தகைய சுத்தி செய்வதில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனி முறை உள்ளது.
5. அவுரி வேரையும் சுக்கையும் சம அளவு நீருடன் கலந்து மண் சட்டியில் காய்ச்சி சரிபாதியாக ஆகும் வரை காய்ச்சி மருந்துகளின் வீரியம் உடலில் இருந்து நீங்க தருவது வழக்கம்.
6. முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை. ஆயுர்வேதத்தில் இதனை நீலி எனப்படுகிறது.
குணம்: கப, வாத நோய்களைத் தீர்க்கும். விஷத்தைப் போக்கும். வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும்.
நோய்களில் உதரம் என்னும் வயிறு வீக்கம், வாதரக்தம், ஆமவாதம், குன்மம், ஜ்வரம், மண்ணீரல் நோய்களை நீக்கும்.
சோஷம் என்னும் உடல்எடை குறைதலில் அவுரி வேரை பசும் பாலில் கலந்து பருகவேண்டும் (கத நிக்ர ஹம்)
பாம்பு கடியில் அவுரி வேரை கழனி தண்ணீரில் இடித்து சாப்பிட எந்த விதமான பாம்பு கடியில் ஏற்படும் விஷமும் நீங்கி விடும் (ராஜ நிகண்டு)
பல்லில் உள்ள கிருமிக்கு நீலியின் வேரைக் கடித்துத் துப்ப தீரும் (கத நிக்ர ஹம்)
கடைகளில் கிடைக்ககூடிய மருந்துகள் நீலி பிருங்காதி தைலம், நீலின் யாதி கிருதம், நீலி காதி தைலம்.
இந்த அவரி சமூல சாறு நல்ல பாம்பு விஷத்திற்கு எதிர் மருந்தாக செயல்படும்.
தீப்புண்: தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களைச் சரியாக்க இந்த அவுரி பயன்படும்.
வெளுத்த முடிக்கு இயற்கையாக கருப்பாக்க இந்த நீலி பயன்படும்.