பாதாளமூலி மருத்துவ பயன்கள் - paathaala mooli - ஔசதம் - OWSHADHAM -->

Monday, August 3, 2015

பாதாளமூலி மருத்துவ பயன்கள் - paathaala mooli


பாதாளமூலி


பாதாளமூலி, சப்பாத்தி கள்ளி
பாதாளமூலி
தமிழ் பெயர் : பாதாளமூலி, சப்பாத்தி கள்ளி

ஆங்கில பெயர் : common prickly-pear, opuntia dillenii


 வட்ட வடிவ சதைப்பற்றான கொத்துக் கொத்தான முள்களையுடைய தண்டுகளையும், மஞ்சள் நிற மலர்களையும், புறப்பரப்பில் முள்ளுள்ள சிவப்பு நிற மலர்களையும் கனிகளையும் உடைய கள்ளி இனம் ஆகும். இதனை சப்பாத்தி கள்ளி என்றும் அழைக்கப் படுகிறது. இதன் தண்டு, வேர் மற்றும் பழம் மருத்துவ குணம் உடையவை.

பாதாளமூலி, சப்பாத்தி கள்ளி
பாதாளமூலி

பாதாளமூலி மருத்துவ குணங்கள்


நஞ்சு நீக்குதல், உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியடைய செய்தல் ஆகிய குணங்களையுடையது.

 பாதாளமூலி சதையைச் சிறு சிறு துண்டுகளாக்கி மிளகுத்தூள் சேர்த்து 5 முதல் 10 துண்டுகள் சாப்பிட எட்டி, வாளம், அலரி, சேங்கொட்டை, நாவி, ஊமத்தை ஆகியவற்றின் நஞ்சு உடலில் இருந்து நீங்கும்.

வெப்பத்தினால் ஏற்படும் வயிற்று வலி, அடிக்கடி மலம் கழித்தல், கிராணி, சத்தத்துடன் வெளியேறும் உஷ்ணபேதி ஆகியவை குணமாகும். 


இரண்டு வேரை வெட்டி எடுத்து பொடி செய்து 10 கிராம் வரை சாப்பிட கொடுக்க பூரான்கட, வண்டுகடி நஞ்சு முறியும். தேள் கடிக்கு கொடுத்து காயை வாட்டி கடிவாயில் வைக்க குடைச்சல் தீரும்.

பழச்சாற்றில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர கோடைகால வெப்ப நோய் தீரும். முள்நீக்கி விளக்கொண்ணெயில் வாட்டி முடக்கு வாதத்திற்கு வைத்துக் கட்டலாம். ஓத்தடம் கொடுக்கலாம்.

இரத்த கட்டிகள்


இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.

கட்டிகள்


முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்
 paathaala mooli maruthuva payan  sappathi kalli maruthuva payan paathaala mooli in english sappathikalli in english. பாதாளமூலி ஆங்கில பெயர் சப்பாத்தி கள்ளி ஆங்கில பெயர்.pathalamooli bhathaala mooli bathala mooli, sapathikalli maruththuva payan, sapathikalli maruthuva payankal